Thursday, 3 October 2024

thadakkaip- pangayam - 010 - thirupparangkuntram

 

010 - 010 தடக்கைப் பங்கயம் - திருப்பரங்குன்றம் 

 

ஐம்பொறிகளால் ஆட்டி வைக்கப்படும் 

என் வாழ்வைத் திருத்தி,

உலகத்தவரை நாடி 

யாசித்துச் சுழலும் என்னை,

உன் பாதங்களுக்குத் தொண்டு செய்ய அருள்வாயே.

படைக்க பிரமன், 

அழிக்க சங்கரன், 

காக்க திருமால்

என நியமித்து, 

அவர்களுடைய பயத்தை நீக்கின வேலாயுதனே,

வள்ளியை வணங்கிய பெருமாளே,

திருப்பரங்குன்றத்தில் தங்குபவனே.




santhatham banDha - 009 - thirupparangkutram

 

009 - 009 சந்ததம் பந்தத் தொடராலே - திருப்பரங்குன்றம்

 

பாசத்தினால் ஏற்படும் 

துயரத்தினால் சோர்ந்து அலையாமல்,

கந்தன் என உன்னை தரிசித்து 

அன்பு கொள்வேனோ.

ஐராவதம் வளர்த்த 

தேவயானையை மணந்தவனே,

சங்கரன் பக்கத்தில் அமரும் 

பார்வதியின் குழந்தையே,

திருச்செந்தூரிலும், 

அழகிய கண்டியிலும்.

திருப்பரங்குன்றத்திலும் 

அமர்ந்த பெருமாளே.




kanakanthiraLkintra - 008 - thirupparangkuntram

 

008 - 008 கனகந்திரள்கின்ற - திருப்பரங்குன்றம்

 

தங்கம் திரண்ட மேருமலையை 

செண்டாயுததால் உடைத்தவனே,

யானைமுகவனுக்கு இளையவனே,

ஆதிசேஷன்மேல் துயில்பவரும்,

பாற்கடலைக் கடைந்தவருமான

திருமாலின் அன்பார்ந்த மருகனே,

பலதுன்பங்களால் சுழலும் 

என்னுடைய பாவங்கள் இன்றோடு அழிய 

நீ என்முன் தோன்றி அருளவேண்டும்.

பாவம் இல்லாதவரும்,

திரிபுரத்தை எரித்தவருமான 

சிவபிரானின் மகனே,

சூரன் மடிய மயில்மீது வந்தவனே,

வளமிக்க திருப்பரங்குன்றத்தில் 

அருள்பாலிக்கும் பெருமாளே.




karuvadainthu - 007 - thirupparangkuntram

 

007 - 007 கருவடைந்து - திருப்பரங்குன்றம்

 

சூரியன் சுக்ரீவனாகவும்,

இந்திரன் வாலியாகவும்,

பிரமன் கற் இனத்து ஜாம்பவான் ஆகவும்,

அக்னி நீலனாகவும்,

ருத்திரர் அனுமன் ஆகவும்,

இந்த உலகில் வந்துசேர,

இவர்களோடு அசுரர்களை வெற்றிகொண்ட 

ஸ்ரீராமன் புகழும் மருமகனே,

பிரமனை தண்டித்து, 

உலகத்தையும் படைத்து,

அன்புடன் திருப்பரங்குன்றத்தில் 

வீற்றிருக்கும் பெருமாளே,

இந்தப் பிறவி எடுத்தது போதும்,

உன் அருளை நான் எப்போது பெறுவேன்.




unaiDDinam thozhuthilan - 006

 

006 - 006 உனைத்தினம் தொழுதிலன் - திருப்பரங்குன்றம்

 

அசுரர்களோடு போர் செய்த வேலவனே,

வள்ளியை அணைந்தவனே,

தேவர்களும் முனிவர்களும் 

செய்யும் பூசையில் மகிழ்பவனே,

திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே,

நான் உன்னை தினமும் தொழுவதில்லை,

உன்னைக் குறித்து உரைப்பதில்லை,

உன்னை பூசிப்பதில்லை,

உன்னை பணியவில்லை,

ஒரு தவமும் செய்யவில்லை,

உன் அன்பர்கள் இருக்கும் இடம் அறிவதில்லை,

உன் மலையை வலம் வருவதில்லை,

இவ்வாறு இருந்தும், யமன் வரும்போது,

என் பயம் அகல, அஞ்சேல் எனக்கூறி 

மயில்மீது வருவாயே.




Wednesday, 2 October 2024

muththaith- tharu - 005

 

005 - 005 முத்தைத்தரு பத்தித்திருநகை - நூல்

 

அசுரர்களைக் கொன்று,

க்ரௌஞ்சமலையைத் தூளாக்கி

போர் செய்த பெருமாளே,

அழகான பல் வரிசைகள் உள்ள 

தேவயானையின் தலைவனே,

சத்தி வேலாயுதத்தை உடைய சரவணக் கடவுளே,

மோக்ஷத்தை அளிக்கும் ஞானகுருவே,

சிவனுக்கு பிரணவத்தை உபதேசித்தவனே,

பிரம்மாவும் திருமாலும் 

முப்பத்து முக்கோடி தேவர்களும் 

பணிய நின்றவனே,

ராவணனுடைய பத்துத் தலைகளும் விழ

அம்பை செலுத்தினவனும்,

மந்தாரமலையை மத்தாக வைத்து 

பாற்கடலை கடைந்தவனும்,

பகலை சக்கிராயுததால் இரவாக்கி,

அர்ச்சுனனுக்கு சாரதியாக வந்தவனும் ஆன

திருமால் பாராட்டும் பரம்பொருளே,

என்னை காத்தருள் காலம் உண்டோ.




ninathu thiruvadi - 004 - vinAyakar sthuthi

 

004 - 004 நினது திருவடி - விநாயகர் ஸ்துதி

 

போருக்கு வந்த அசுரர்களை 

அழித்த பெருமாளே, முருகா,

உனது திருவடி, வேல், மயில், 

சேவல், இவைகளை மனதில் வைத்துக் 

கருதும் அறிவு நான் பெறவேண்டி,

அப்பம், பால், தேன். பழம் இவைகளை

ஏற்றுக்கொள்ளும் ஒற்றைக் கொம்பனான 

கணபதியை வலம் வந்து 

மலர்களினாலும் தோத்திரங்களினாலும்

அர்ச்சனை செய்வதை மறவேனே.




umbartharu DhEnumaNi - 003 - vinAyakar sthuthi

 

003 - 003 உம்பர் தரு தேனுமணி - விநாயகர் ஸ்துதி

 

தம்பிக்காக தினை புனத்திற்கு வந்தவனே,

தந்தையை வலம் வந்து 

கனியை கொண்டவனே,

அன்பர்களுக்கு பொருளாக விளங்குபவனே,

ஐந்து கரங்களை உடைய 

யானைமுகப் பெருமாளே.

கற்பக மரம், காமதேனு, சிந்தாமணி,

இனிய அமுதம் போல் 

இன்ப உணர்ச்சி என் மனதில் ஊற,

என் மீது ஆதரவு வைத்து அருள்வாயே.




pakkarai vichithra maNi - 002 - vinAyakar sthuthi

 

002 - 002 பக்கரை விசித்ரமணி - விநாயகர் ஸ்துதி

 

கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, 

பருப்பு, நெய், எள், பொரி, அவல்,

துவரை, இளநீர், தேன், பயறு, 

அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெளரிப்பழம்,

மாவு, கிழங்கு வகைகள், கடலை, 

இவைகளை பக்ஷணமாகக் கொள்ளும்

விக்கின சமர்த்தன் எனும் விநாயகர், 

சிவபெருமான் பெற்ற யானைமுகப் பெருமாளே,

அழகான மணி, பொன், கல், அணை, இவை அணிந்த

உக்கிரமான மயிலும், கடம்ப மலர் மாலையும்,

க்ரௌஞ்ச மலையை அழித்த வேலும், சேவலும்,

பன்னிரண்டு தோளும், செய்ப்பதியும் வைத்து

உயர் திருப்புகழை செப்பு என 

எனக்கு தந்த அருளை நான் மறவேன்.




kaiththala niRaikani - 001 - vinAyakar sthuthi

 001 - 001 கைத்தல நிறைகனி - விநாயகர் ஸ்துதி

 

அடியார்கள் மனதில் வாழ்பவன்,

கேட்டதை அளிக்கும் கற்பக விருக்ஷம்,

சிவனாரின் மகன், மற்போருக்கு தோளுடையவன்,

மதயானையை ஒத்தவன், 

மத்தள வயிறை உடையவன், பார்வதியின் மகன்,

இயல், இசை, நாடகம் எனும் 

முத்தமிழ் நூலை மேரு மலையில் எழுதினவன்,

திரிபுரங்களை எரித்த சிவபிரானுடைய 

ரதத்தின் அச்சை பொடியாக்கினவன்,

தினை புனத்தில் யானையாக வந்து 

வள்ளியை அத்தருணத்திலேயே 

முருகனுக்கு மணம் செய்வித்தவன்,

கரத்தில் உள்ள பழம், அவல், பொரி இவைகளை 

உண்ணும் யானை முகக் கடவுள், ஆன

கணபதியை புது மலர்கள் கொண்டு வணங்குகிறேன்.




makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...