Thursday, 6 February 2025

makkaL thAyarkkum 501 - 407

 

501 - 407 மக்கள் தாயர்க்கும் - பொதுப் பாடல்

 

உற்றார் உறவினர்களால் 

என் மனம் சோர்வடைய,

யமனும் என்னைத் தேடிவர,

நான் இறப்பதற்குமுன் 

நனவும் கனவும் அற்று

நான் வாழ்வதற்கு நீ அருள்வாய்.

மன்மதனை எரித்து 

யோகத்தில் அமர்ந்த 

சிவபிரான் முன்னிலையில்

அவருக்கு ஞானப் பொருளை 

உபதேசித்தவனே,

உன் பத்தர்கள் பாடல்களுக்கு 

மனம் உருகும் முருகனே,

உனது பக்கத்தில் 

தேவயானையும் வள்ளியும்

உடன் வாழும் இனிய பெருமாளே.


 

 

 

sIrAna kOlakAla 500 - 199

 

500 - 199 சீரான கோலகால - விராலிமலை

 

ஆடம்பரமான கிரீடங்களையும், 

ஆறுமுகங்களையும்,

பன்னிரு தோள்களையும் 

இரு திருவடிகளையும்,

வேடர்மகள் வள்ளியையும், 

இந்திரன்மகள் தேவயானையையும்,

உனது திருக்கோலத்தையும்,

வேலையும் மயிலையும் கண்டு 

மகிழ்ந்தவனாக நான் இருப்பினும்,

தினம் இவைகளைத் 

தியானம் செயும் பேற்றை வேண்டுகிறேன்.

மதுரையில் அம்பலத்தில் ஆடின சிவனார்

இயற்றிய அகப்பொருள் 

எனும் நூலுக்கு பொருள் கூற

ஊமை பிள்ளைபோல் செட்டிகுலத்தில் தோன்றி,

திருவிளையாடல் புரிந்த தீரனே,

வரங்களை கொடுப்பவனே, குருநாதனே,

பாரதப் போரில் சூரியனை 

சக்கிரத்தால் மறைத்த கிருட்டிணன் மருகனே,

காவேரிக் கரையில் உள்ள வயலூரிலும்

விராலிமலையிலும் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

jeniththidumvhala chAzhalum 499 - 221

 

499 - 221 செனித்திடுஞ்சல சாழலும் - கும்பகோணம்

 

இந்த பிறப்பும் அதொடுவரும் வாழ்க்கையும்

ஒழிக்க வல்ல சிவயோகத்தையும்

ஞானத்தெயும் எனக்கு அருள்வாய்.

அசுரர்களுடைய சேனையை 

வளைத்து வென்றவனே,

முனிவர்களுக்கு அருள்பவனே,

வள்ளியை அணைப்பவனே,

சிவனிடத்துத் தோன்றிய சுடரே,

தவம் செய்வோர்களை அருளும் குழந்தையே,

கும்பகோணத்தில் வாழும் முருகனே,

தேவர்கள் பெருமாளே.


 

 

karuki aRivakala / poruvinmalai 498 - 203

 

498 - 203 கருகி அறிவகல / பொருவின்மலை - அத்திப்பட்டு

 

இந்த உலகில் பிறந்து இறந்து 

அழிகின்ற என்னை நினைத்து 

உன் திருவடிகளை தந்தருள்வாய்.

இமவான் பெற்ற 

காஞ்சியில் அருமையான தவம் செய்த 

பார்வதி பெற்ற மகனே,

ராவணன் பத்துத் தலைகளும் 

விழ அம்பை செலுத்தின

சக்ராயுதம் ஏந்தியவன், 

ஆதிசேஷன்மேல் பள்ளிக்கொள்பவன்,

ஆன திருமாலின் மருகனே,

பச்சைமயில் மீது வந்து

கடல் வற்ற, அசுரர்கூட்டம் அழிய,

இந்திரன் குடியேறச் செய்த இளையவனே,

கயல் மீன்களோடுள்ள 

அத்திப்பட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

athimaDankakka 497 - 422

 

497 - 422 அதிமதங்கக்க - காஞ்சீபுரம்

 

தெய்வயானையை அணைத்தவன்,

காட்டில் சென்று 

வள்ளி மீது மோகம் கொண்டவன்,

வேலாயுதன், 

அன்பர்கள் துக்கத்தை நீக்குபவன்,

என பூஜித்து உன் திருப்புகழைப் பாடும்

என்னை கண்பார்த்து அருள்வாய்.

தக்கன் நடத்திய யாகத்துக்குப் போயி,

திருமாலும் பிரமனும் 

அச்சம் உற தாக்கியும்,

அட்ட திக்கு பாலர்கள் 

சேனை நிலைகுலைத்துப் போகவும்

தாக்ஷயணி வருத்தம் தீரவும்,

தக்கன் அவமானப்பட்டு ஒழியவும்,

சரசுவதி பங்கம் அடைந்து வெட்கப்படவும்,

கோபித்து வெற்றி பெற்ற 

சிவபிரான் வணங்க

காஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

thalangaLil varumghana 496 - 290

 

496 - 290 தலங்களில் வரும்கன - பெருங்குடி

 

தாய் வயிற்றில் பிறந்து,

தமது பொலிவு வலிமை குன்ற

இறந்துபோகும் இப்பிறப்பை 

ஒழிக்க மாட்டேனோ.

இலங்கையில் வீடுகள் 

தீ பற்றி எரியச் செய்த அனுமனோடு

கடல் அஞ்ச வந்த ராமனின் மருகனே,

க்ரௌஞ்சமலை தூளாக வேல் எறிந்தவனே,

தமிழ் விளங்கும் வயலூரானே,

சோலைகளும் கரும்பும் 

வாழைகளும் நிறைந்த

பெருங்குடிக்கு அருகில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

sAlanedunAL madanthai 495 - 225

 

495 - 225 சாலநெடுநாள் மடந்தை - கொடைநகர்

 

இந்த புவிமீது பிறப்பை அடைந்து

பாழான நரகில் போய்ச் சேராமல்

உனது பாதமலர்களை அடைய 

அன்பை அருள்வாய்.

விஷத்தை உண்டவர், 

கங்கையை சூடினவர்,

ஆன சிவபிரான் தந்த முருகனே,

கஜேந்திரன் ஆதிமூலமே என கூவ

தஞ்சம் அளித்த நாராயணனின் மருகனே,

தினைப்புனத்தில் வாழ்ந்த 

வள்ளியை அணைந்தவனே,

சூரன் ஒடுங்க வேலை செலுத்தினவனே,

கொடைநகரில் வாழ வந்த பெருமாளே.


 

 

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...