457 - 470 விரகோடு வளை சங்கடமது - திருவருணை
யமன் வரும் நேரம் என அறிந்து,
உற்றோர் அழுதுவரும்முன்
எனது ஊழ்வினைகளை தொலைக்க,
உன் திருவடிகளைத்
துதிக்கும் ஒழுக்கதைத் தருவாய்.
தன்னை துதிப்பவர்கள்
மனதில் உறைபவரும்,
ஆதிசேஷன் மேல்
துயில்பவரும், ஆகிய திருமால்,
வேதத்தை ஓதும் பிரமன்,
தேவர்கள் பயம் நீங்க
ஆலகால விஷத்தை உண்டு,
ரிஷப வாகனத்தில் ஏறி வருபவரும்,
பார்வதியை தனது
இடபாகத்தில் வைத்தவருமான
சிவபிரான் வீற்றிருக்கும்
திருவண்ணாமலையில்
எழுந்தருளிய பெருமாளே.
No comments:
Post a Comment