Saturday, 1 February 2025

anaivarum maruNdaruNdu 431 - 016

 

431 - 016 அனைவரும் மருண்டருண்டு - திருச்செந்தூர்

 

எனக்கு வந்த நோயைக் கண்டு 

யாவரும் பயந்து,

அருவருப்படைந்து அகல,

அந்த நிலைமை தீர,

உன் பாதத்தை வணங்கும் 

பாக்கியத்தை நான் என்று பெறுவேனோ.

வள்ளியை அணைத்தவனே,

யானைமுகன் கணபதியோடு போட்டியிட்டு

உலகம் முழுவதையும் சுற்றின மயில்வீரனே,

திருச்செந்தூரில் அமர்ந்த இறைவனே,

குகனே, கந்தனே,

ஏழு கடல்களும், அட்ட கிரிகளும் அஞ்ச

தேவர்களை அஞ்சேல் 

என அருளிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...