Monday, 3 February 2025

punamadanthaikku 468 - 436

 

468 - 436 புனமடந்தைக்கு - காஞ்சீபுரம்

 

உன் திருவிளையாடல்களைப் பாடி

யாவருக்கும் உபதேசிக்க

என்மேல் தயை கூர்ந்து

உன் திருவடியை 

எனக்கு எப்போது தந்தருள்வாய்.

எள், பொரி, அப்பம். பழம்,

முதலியவைகளை வாரி உண்ட 

கற்பக விநாயகரை பெற்ற அந்தணி,

நவாவரணத்தில் வீற்றிருக்கும் கௌரி, 

பார்வதி,

ஏகாம்பரநாதரைக் கணவனாக 

அடைந்த உமாதேவிக்குப்

பக்கத்தில் அமர்ந்து 

காஞ்சீபுரத்தில் - குமரக்கோட்டத்தில்

தவம் புரிந்து வரம் பெற்ற பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...