484 - 359 குருதி தோலினால்மேவு - பொதுப் பாடல்
இந்த உடலில் இருந்து
உயிரை நீக்கக் காலன் வரும்போது,
வேலாயுதனே,
உன் திருவடியை நான் பாடும்
திருவருளைத் தருவாய்.
மருதமரம் விழும்படி செய்த மாயவன்,
கஜேந்திரனை காப்பாற்றினவன்
தாயான கைகேயி சொல்லை மறுக்காமல்
காட்டுக்குப் போன ராமன்,
இவர்களின் மருகனே,
ஞானமூர்த்தி, ரிஷப வாகனர்,
கபாலத்தை ஏந்தியவர்,
திரிபுரத்தை எரித்தவர் ஆகிய
சிவபெருமானுடைய மகனே,
காரணங்களுக்கு அப்பால் பட்டவனே,
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment