476 - 018 இருக்கும் காரண மீறிய - திருச்செந்தூர்
இரத்தின கிரீடங்கள் அணிந்து
அருள் பார்வையினால்
அடியார்களை மகிழ்சசியுடன்
கலந்த பெரும் பொருளே,
திருந்தின குணம் உள்ளவன் இவன்
என்று என்னை தினமும் சிறப்புற
உனது திரு அருளால் ஆண்டருள்வாய்.
வேத ஆகம சாரங்கள் தொழுகின்ற
தேவர்களின் துன்பம் தீர்ப்பவனே,
அடியார்களின் அன்பனே,
உலகங்களை சங்காரம் செயும்
சிவபெருமான் அருளிய குமரனே,
தவசிரேஷ்டர்கள் வேதியர்
வணங்கும் திருமாலின் மருகனே,
திருச்செந்தூரில் வீற்றிருக்கும்
தேவர்களின் பெருமாளே.
No comments:
Post a Comment