433 - 021 ஓராதொன்றைப் பாராது - திருச்செந்தூர்
உண்மையை ஆராய்ந்து
அறியாமலும், பார்க்காமலும்,
என் உடலும் உள்ளமும்
குலைந்து போகாதபடி,
உன் திருப்புகழ் நின்று உதவும் என
ஊரார் கூறும்வண்ணம்
திருவருள் தருவாய்.
வெற்றிவீரனே,
க்ரௌஞ்சமலையை தொளைத்தவனே,
சூரனாம் மாமரம் அஞ்ச போரிட்ட வேலனே,
ரிஷப வாகனத்தில் வரும் எம் தந்தை
சிவனாருக்கு இனியவனே,
திருச்செந்தூரில் மேவிய பெருமாளே.
No comments:
Post a Comment