462 - 112 மகர கேதனத்த - சுவாமிமலை
மன்மதனுடைய சேட்டையினால்
நாட்களை கழித்த நான்
இதுவரை எடுத்த
பிறவியின் வேறை அறுத்து
உனது திருவடியைத் தரும்
ஓர்நாள் உண்டோ.
ஏழு உலகங்கள் மீதும்,
அட்ட கிரிகள் மீதும்
மயிலைச் செலுத்துகின்ற வீரனே,
அசுர சேனையை அழித்து
தேவர்களுக்கு
வாழ்வை அளித்த இளையவனே,
சிவபிரான் உன்முன் நிற்க சுவாமிமலையில்
உபதேச கோலத்தில் நிற்பவனே,
ஞான மூலப்பொருளை
சிவனுக்கு உபதேசித்த பெருமாளே.
No comments:
Post a Comment