437 - 090 வாதம் பித்தமிடாவயிற் - பழநி
பலவிதமான வியாதிகளால்,
தொண்ணூற்றியாறு தத்துவங்களுடன்
ஐம்புலன்களால் சூழப்பட்ட
மாய வாழ்க்கையில்
மூழ்கியிருக்கும் என்னை
தூய்மை வாய்ந்த
உன் அடியார்களுடன் சேர
அருள் தரவேண்டும்.
நெருப்பை வீசும் வேலைச்
செலுத்தும் மயில்வீரனே,
பிரமனைக் குட்டி
சிவபிரானுக்கு பிரணவ
மந்திரத்தை ஓதியவனே,
வேடன் வேங்கை கிழவன்
போன்ற வேடங்களில்
தினைப் புனம் சென்று
வள்ளியை அடைந்தவனே,
பழனியம்பதி பெருமாளே.
No comments:
Post a Comment