Tuesday, 4 February 2025

pUraNa vArakumbha 477 - 043

 

477 - 043 பூரண வாரகும்ப - திருச்செந்தூர்

 

என் ஆசை மயக்கத்தையும்,

நான் எனும் எனது ஆணவத்தையும் நீக்கி,

உனது திருவடிகளை நான் காட்சிபெற,

மா தவம் செய்த யோகிகளைப்போல்

நான் விளங்கும்படி அருள்வாயே.

தேவாரப்பாடல்கள் பாடி

அன்பினால் சிவனை 

வணங்கிய திருஞானசம்பந்தனே,

கடலில் மாமரமாக நின்ற 

சூரனை வென்று

வானுலகத்தவற்கு முன்பு 

உண்டான துன்பம் ஒழிய

உதவின முருகேசனே,

கஜேந்திரன் ஆதிமூலமே என அழைக்க

அவனுக்கு மோக்ஷம் கொடுத்த 

திருமாலின் மருகனே,

சிறந்த முத்துக்கள் போன்ற

சங்குகள் நிறைந்த திருச்செந்தூரில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...