485 - 223 நீலமுகிலான - கோடி நகர் - குழகர் கோயில்
மூவாசைகளில் மயக்கம் கொண்டு
காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக
உன்னை ஓதுகின்ற அடியார்களுடன்
ஒருமுறையாவது முருகா என
உன்னை புகழுமாறு
திருவருள் தந்தருள்வாய்.
வள்ளிமீது உள்ள ஆசையினால்
காட்டு வேடர்களை
வேலால் மாளச் செய்தவனே,
திருநீற்றை அணிந்த சிவபெருமானோடு
விளையாடுகின்ற குழந்தையே,
கணபதிக்குப் பின் தோன்றிய தம்பியே,
குழகர் எனும் நாமத்துடன் சிவபெருமான்
கோடி எனும் தலத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment