Friday, 31 January 2025

udaiyavarkaL Evar 425 - 119

 

425 - 119 உடையவர்கள் ஏவர் - திருத்தணிகை

 

பணமுள்ளவர்களைத் தேடிச்சென்று,

அவர் மீது கவி பாடி 

நாளை வீணாக்கலாமோ,

உன் பாதங்களை தந்தருள்வாய்.

ரிஷப வாகனர், 

திரிசூலத்தை ஏந்தினவர், 

ஆன சிவபெருமானும்

உமாதேவியும் கண்டுமகிழ 

தளர்நடை இட்டு

அவர்கள் முன் வருபவனே,

திருத்தணிகையில் 

உலாவும் பெருமாளே.


 

 

vAthinai adarntha 424 - 501

 

424 - 501 வாதினை அடர்ந்த - பழமுதிர்சோலை

 

உலகமயக்கம் நீங்கி 

நான் தெளிவுறவில்லை,

உன்னை அறியவில்லை,

உலகமெல்லாம் சுற்றித் திரிகின்றேனே,

உன்னை தொழவில்லையே,

சிவவாழ்வு எனும் நிலை 

தந்து என்னை ஆள்வாய்,

சூரர் குலத்தை வென்ற 

பழநிமலை வாழ் பெருமாளே.


 

 

thudikoNOykaLOdu 423 - 500

 

423 - 500 துடிகொணோய்களோடு - பழமுதிர்சோலை

 

இந்த உலக வாழ்க்கையிலும்,

அதோடுவந்த நோய்களிலும் 

நான் வருந்தாமல், 

திருவடியை அடைவேனோ.

வாயு மகனான அனுமன்,

வாலி மகனான அங்கதன்,

கடலில் கல்லு போட்டு 

கட்டின அணை வழியாக

இலங்கை அடைந்து,

ராவணனை அம்பினால் 

கொன்ற ராமனின் மருகனே,

சூரன் பத்மன் சிங்க முகன், 

தாரகாசுரன் ஆகியோரை வென்றவனே,

முனிவர்களும், தேவர்களும், 

ஞானம் அடைந்த

பழமுதிர்சோலையில்  

வீற்றிருக்கும் பெருமாளே,

தியாகமூர்த்தியாம் 

சிவபிரான் ஈன்ற பெருமாளே.


 

 

thalaimayir kokkukku 422 - 499

 

422 - 499 தலைமையிர் கொக்குக்கு - பழமுதிர்சோலை

 

வயதாகி, வியாதி வந்து, 

உயிர் நீங்கும் முன்

உனது திருப்புகழைக் கற்று,

உன் திருவடியை வணங்கி,

பிறப்பை அறுத்து

மோக்ஷம் அடைய அருள்வாயே

சூரனின் சேனையையும் 

அவனையும் கொன்றவனே,

இந்திரன் மகள் தேவயானைக்கும் 

வள்ளிக்கும் மனதை பறிகொடுத்தவனே,

க்ரௌஞ்சமலையையும் அழித்து,

மேலான மலையில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

sIlamuLathAyar thanthai 421 - 498

 

421 - 498 சீலமுளதாயர் தந்தை - பழமுதிர்சோலை

 

மாய ஆசைகளில் மயக்கம் அடைந்து, 

மனம் நோகாமல்

உன் பாதங்களில் பணியும் 

அருள் தருவாய்.

சூரனை வென்ற வலிமை மிக்க வீரனே,

ஆலகாலத்தை உண்டவரும், 

திருநடனம் புரிபவரும் ஆன

உனது தந்தை மகிழ்ச்சி அடைய

உபதேச மொழியை அருளி,

சோலையில் வீற்றிருக்கும் கந்தனே,

ஆதிமுதல்வனாக வந்த பெருமாளே.  


 

 

kAraNamathAka vanthu 420 - 497

 

420 - 497 காரணமதாக வந்து - பழமுதிர்சோலை

 

முன்வினைகளின் காரணமாக 

இங்கு பிறந்து,

காலன் என்னை நெருங்காதபடி

நான் நர்கதி அடைய

திருமாலும் பிரமனும் கண்டறியாத

ஞானநடனத்தை ஆடிவருவாய்.

தேவயானையின் மணவாளனே,

ஆறு திருமுகங்களையும் 

பனிரெண்டு கரங்களையும் உடையோனே,

சூரனை வென்ற வேலனே,

பழமுதிர்சோலையில் 

மேவி விளங்கும் பெருமாளே.


 

 

karuvAkiye thAyuDara 419 - 496

 

419 - 496 கருவாகியெ தாயுதர - பழமுதிர்சோலை

 

தாயின் வயிற்றில் உருவமெடுத்து, 

இந்த பூமியில் பிறந்து,

உன்னை நினையாமல்

மனைவி மக்களோடு வாழ்ந்த எனக்கு

உன் புகழை ஓதி 

ஞானம் அடையும் நாள் வருமோ.

அசுரர்கள் மாள போர் செய்தவனே,

யானை வளர்த்த மகள் 

தேவயானையையும் 

வள்ளியையும் அணைத்தவனே,

பழமுதிர்சோலையில் வீற்றிருப்பவனே,

அன்பர்கள் போற்றும் பெருமாளே,


 

 

Asai nAlu chathurakkamalm 418 - 495

 

418 - 495 ஆசை நாலு சதுரக்கமல - பழமுதிர்சோலை

 

சுவாச வாயு போகிறவழி 

அறிவில்லாதவனான

எனக்கு அருளும் முத்தியும் 

கிடைக்குமாறு அருள்வாய்.

குதிரை வியாபாரி என வந்து,

குதிரைகளை விற்ற மாணிக்கவாசகரை

அடிமையாகக் கொண்ட 

கிருபாகரமூர்த்தி,

சிவபிரானின் இடப்பக்கம் 

உறைகின்ற தேவி ஈன்ற செல்வமே,

காசி, இராமேசுரம், 

திருச்செங்கோடு, திருவாரூர்,

வேலூர், காஞ்சி, மதுரை, 

திருப்பறியல், திருவானைக்கா,

திருப்புனைவாசல், 

திருவண்ணாமலை, திருத்தணிகை,

திருச்செந்தூர், நாகப்பட்டினம், 

சீகாழி, வைத்தீசுரன் கோயில், 

பழநி, திருக்குறுக்கை,

திருநாவலூர், திருவெண்ணைநல்லூர்,

எனும் தலங்களில் விளங்கும் உனக்கு

சோலைமலையிலும் உறைகின்ற 

முத்தர்கள் புகழும் தம்பிரானே.


 

 

akaramumAki aDhipanumAki 417 - 494

 
417 - 494 அகரமுமாகி அதிபனுமாகி - பழமுதிர்சோலை

 

முதன்மையாகி, தலைவனாகி, 

மேம்பட்டவனாகி, யானாகி,

பிரமனாகி, திருமாலாகி, சிவனாகி, 

அம்மூவருக்கும் மேலான பொருளாகி,

யாவுமாகி, இனிமை தரும் 

பொருளாகி வருபவனே.

இந்த பூமியில் எளியவனாகிய 

அடியேனும் வாழ எனதுமுன் ஓடிவரவேணும்.

அழகனே, வேடன் செய்த பூஜை மகிழ்வுடன் ஏற்றவனே,

கதிர்காமத்தில் உறைபவனே,

ஆடும் மயிலோனே,

பழமுதிர்சோலையில 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

vidunkaikkoththa kadAvudai 416 - 493

 

416 - 493 விடுங்கைக் கொத்த கடாவுடை - சிதம்பரம்

 

யமனிடத்தில் அடங்கி,

சுடுகாட்டிற்கு போகுமுன்

எனக்கு நல் அறிவு தர 

மனம் பொருந்துவாய்.

ஏழு மராமரங்களை 

அம்பைவிட்டு வீழ்த்தி,

வாலியை அழித்து,

ராவணனின் பத்துத் 

தலைகளும் வீழ்த்தின

ராமனின் சிறந்த மருமகனே,

கவி அரசனாக 

தேவாரங்களை ஓதினவனே,

ஒப்பற்ற தலைவனே,

புலியூரில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

vAtha piththamodu 415 - 492

 

415 - 492 வாத பித்தமொடு - சிதம்பரம்

 

பல நோய்களோடுள்ள வேடங்கள் பூண்டு,

நான் இறந்துவிடாமல்

முத்துவீட்டை கிட்ட 

என் உள்ளம் வேண்டாதோ.

கடல், சூரன், மற்ற அசுரர்கள் 

அழிய வேலை செலுத்தினவனே,

பச்சை நிறம் கொண்ட உமாதேவியை

தன் இடபாகத்தில் வைத்த 

சிவபிரான் பெற்ற குழந்தையே,

கற்பக விநாயகருக்குப் 

பின் தோன்றிய சரவணனே,

பிரணவத்தை எங்கனம் ஓதுவிக்க வேண்டும்

எனத் தெரிந்த தலைவனே,

வள்ளியை மணந்தவனே,

புலியூரில் அழகுவாய்ந்த 

கோபுரத்தில் மகிழும் தம்பிதானே.


 

 

vanthu vanthu viththURi 414 - 491

 

414 - 491 வந்து வந்து வித்தூறி - சிதம்பரம்

 

கணக்கற்ற உருவங்கள் எடுத்து 

அழிந்துபோன என்னை

ஆண்டருளி உனையே 

நினைக்கும்படியான

உள்ளதை தந்தருள்வாய்.

அசுரர்கள் அழிய 

வேலை செலுத்தினவனே,

வள்ளியை அணைத்தவனே,

தேவயானையை மணந்தவனே,

சபையில் நடனம் செய்த 

அம்பலவாணரின் குருநாதனே.


 

 

manamE unakkuRuthi 413 - 490

 

413 - 490 மனமே உனக்குறுதி - சிதம்பரம்

 

மனமே உனக்கு உறுதி தருகிறேன் வா,

மயிலை வாகனமாகக் கொண்டவன்,

அடியார்கள் அரசன்,

மும்மலங்களையும் அழிக்கவல்லவன்,

அவனைத் தொழுவாய்.

உமாதேவியை பக்கத்தில் கொண்ட

சிவபிரானின் குருநாதனே,

அரி, அரன், அயன் மூவரும் துதிசெய்ய

சூரனை வென்றவனே,

வள்ளிக்காக உருகும் முருகனே,

மணம் கமழும் புலியூரில் உறைபவனே.

 

 


parama gurunAThA 412 - 489

 

412 - 489 பரம குருநாதா - சிதம்பரம்

 

சிவனுக்கு குருநாதனே,

கருணையுடன் உபதேசிப்பவனே,

உண்மைப் பொருளை 

உபதேசிக்க வல்லவனே,

முத்தியை தருபவனே,

சிவாயநம எனும் பெருமாள், 

பார்வதியின் மணாளன்,

வினைகள் அழித்து 

என்னை பிரபஞ்சத்தில் 

புகுத்தாமல் விட்டவன்,

சிதம்பரத்தில்வாழ் 

ஜகஜ்ஜோதி பெருமாளே.


 

 

nAdA piRappu mudiyAthO 411 - 488

 

411 - 488 நாடா பிறப்பு முடியாதோ - சிதம்பரம்

 

நாடித் தேடி வரும் 

இந்த தொழிலுக்கு முடிவு கிடையாதோ

என எண்ணிக் கதறும் 

என் மனத்துயரத்தை தீர்க்க வருவாய்.

உமாதேவி பார்வதி அருளிய குழந்தையே,

அடியேனுக்கு வாய்த்த தோழனே,

வள்ளியின் கணவனே, ஈசனே,

புலியூரில் வாழும் செல்வமே,

தேவர்கள் கூட்டத்தை 

வாழ்வித்த பெருமாளே.


 

 

Thursday, 30 January 2025

nanjinaip- pOlum 410 - 487

 

410 - 487 நஞ்சினைப் போலும் - சிதம்பரம்

 

வஞ்சகர்களை நம்பாமல்

உன்னை அன்போடு சரணம் என

நான் கதறுவது 

உன் செவிகளில் விழவில்லையோ.

என்னை காக்கும் பாரம் உனக்கேயாகும்.

உனைவிட்டால் எனக்கு 

யார் துணை செய்வார்,

பிரமனை குட்டினவனே, 

வள்ளியை அணைத்தவனே,

க்ரௌஞ்சமலை நடுங்க, கடல் வற்ற

அசுரர்குலத்தை அழித்த கந்தா,

எம் தந்தையார் சிவபிரான், 

புலியூரில் ஆடும் நடராஜர் தம்பிரானே,

தேவர்களுக்கு அருளியதுபோல்

என் முன் தோன்றி அருளுக.


 

 

thaRukaNan maRali 409 - 486

 

409 - 486 தறுகணன் மறலி முறுகிய - சிதம்பரம்

 

யமன் பாசக்கயிற்றினால் என் உயிரை

இழுத்துக்கொண்டு போகாமல்,

வேதங்கள் ஓதி, சர்குணப் பொருளை

நான் அறியும்படி நீ அருளவேண்டும்.

மஹாலக்ஷ்மிக்கும் திருமாலுக்கும் மருமகனே,

மலைமகள் பார்வதியின் குமரா,

இறைவன் நடனமாடும் புலியூரில் குமரேசனே,

அசுரர்களை கடலில் போர் செய்தவனே,

அடியார்களிடம் கோபத்தை 

கனவிலும் காட்டாத பெருமாளே.


 

 

chudaranaiya thirumEni 408 - 485

 

408 - 485 சுடரனைய திருமேனி - சிதம்பரம்

 

வடிவழக்கும், ஞான சொரூபமும், 

ஆறுமுகங்களும்,

வேதமொழிகள் மணம் வீச

மயில்மீது ஏறி அடியேன் 

இருவினைகள் அழிய நீ வரவேண்டும்.

பிரமன் திருமால் மற்ற தேவர்கள் வணங்க,

ஆலகால விஷத்தை தன் கண்டத்தில் வைத்தவர்,

பாரவ்தியை இடபாகத்தில் வைத்தவருமான

சிவபிரானுக்கு ஞானோபதேசம் தந்தவனே,

இன்பநிலையில் உள்ள 

முதிய முனி வ்யாகரபாதருடன்,

பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி,

நூறுகோடி ரிஷிகள் 

இவர்கள் புகழும் பெருமாளே.


 

 

kaiththaruNajOthi 407 - 484

 

407 - 484 கைத்தருணஜோதி - சிதம்பரம்

 

யானைமுகமுடைய 

கற்பக விநாயகரின் 

இளைய சகோதரன்,

பார்வதியின் தலைவர் 

சிவனாரின் குருநாதன்,

ராமருக்கு மருமகன்,

வேலாயுதன், மயில் வாகனன்,

ஆறுமுகன், அழகன்,

சூரர்கள் அழிய 

வேலை செலுத்தினவன்,

சிறந்த கவி அரசன்,

வள்ளியுடன் புலியூரில் மேவும் 

சிவஞான பெருமாள்.


 

 

gukane guruparanEyena 406 - 483

 

406 - 483 குகனெ குருபரனேயென - சிதம்பரம்

 

குகனே, குருமூர்த்தியே எனப் புகழ, 

என் நாவில் இன்பத் தேன் ஊற,

இருவினைகள் நோய்கள் இவை ஒழிய,

பகல் இரவு இல்லாத 

வெளியில் இன்பம் அடைந்து,

ஆனந்த நிலை பெற மயில்மீது வந்து

உன் திருவடிகளை தந்தருள்வாய்.

கொடிய போர் செய்து 

அசுரர்கள் அழிய வேலை செலுத்தினவனே,

திருநடனம் செயும் 

சிவபெருமான் மனம் உருக

அவருடன் விளையாடும்,

சிதம்பரத்தில் வாழ் 

கந்தப் பெருமாளே.


 

 

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...