Saturday, 25 January 2025

puraipadum chetra kutram 367 - 435

 

367 - 435 புரைபடும் செற்ற குற்றம் - காஞ்சீபுரம்

 

கறைபடிந்த மனத்தன், 

தவம் செய்யாதவன்,

அசத்தியன், வேறு திக்கற்றவன், 

பொறுமை இல்லாதவன்,

பற்றற நிற்கும் கடவுளிடம் 

விருப்பம் இல்லாதவன்,

பொல்லாதவன், 

உன் புகழை கற்கும் ஞானம் இல்லாதவன்,

நர்கதி அடையும் பாக்கியம் இல்லாதவன்,

இங்கனம் உள்ள நான்,

உன் தோள்களையும், வேலாயுதத்தையும்,

கதிர்காமத்தையும் காஞ்சீபுரத்தையும்

கனவிலும் மனதிலும் வைத்து 

தியானித்து உன்னை சேரமாட்டேனோ.

சூரன் அழியவும், தேவர்கள் துயர் நீங்கவும்,

பிரமன் தண்டிக்கப்பட்டு விளக்கவும்,

உன்னை வணங்கும் அடியார்களின் 

பகைவர்கள் ஓட்டம் பிடிக்கவும்,

அழகிய தண்டையும், 

சதங்கையும், உடைய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...