354 - 420 வேடர் செழும்தினை காத்தி - பொதுப் பாடல்
வேடர்குல வள்ளியை கிழ வேடம் பூண்டுக்
காணச்சென்ற உன் திருவடிகளில்
அடியேனும் கூடும்படியான நாள் வருமோ,
மந்தரமலையை மத்தாக்கி,
வாசுகியை கயிறாக்கி,
பால்கடலைக் கடைந்து
அமுதத்தை வரவழைத்தவனும்,
ஆயர்குலத்தில் வந்தவனும்,
ஆன திருமாலும்,
முப்புரங்களை எரித்த சிவபெருமானும்,
செல்வமே என உன்னை துதிக்க,
அரக்கர் கூட்டம் அழிய,
இந்திரனின் சிறையை
நீக்கின பெருமாளே.
No comments:
Post a Comment