347 - 413 முருக மயூர சேவக - பொதுப் பாடல்
முருகா, சரவணபவா,
வள்ளியை அணைத்தவனே,
திரிபுரத்தை எரித்த சிவபிரானுக்கு
உபதேசம் செய்த குருநாதனே,
என துதித்து,
உள்ளம் உருக ஆடியும் பாடியும்
உன் திருவடிகளை நாடியும்,
உன் வழிபாட்டில் நின்று,
உலக ஆசைகள் அற்றுப்போக
ஞான உணர்வுடன்
உன் அடியார்களோடு சேர்ந்து மகிழும்
நாள் உண்டாகுமோ.
மருகனைக் கொல்ல எண்ணிய
கம்சன் அனுப்பின
பூதனை எனும் பேயை,
பின் கொல்ல
வந்த மதயானையை,
விளாமரமாக நின்ற அரக்கனை,
இவர்களை அழித்தும்,
அச்சத்தை தரும்
மராமரங்களுக்கு இடையில்
உரலோடு தவழ்ந்து
அவைகளை விழச்செய்தும்,
வந்த கண்ணனாம் திருமான் மருகனே,
தேவர்கள் போற்றும் பெருமாளே.
No comments:
Post a Comment