Thursday, 23 January 2025

bODha nirgguNa bODhA 341 - 406

 

341 - 406 போத நிர்க்குண போதா - பொதுப் பாடல்

 

ஞானம் நிறைந்தவன், 

உருவம் அற்றவன்,

கலைகளில் சாரமானவன், 

மன்மதனின் மைத்துனன்,

சங்கப் பலகையில் அமர்ந்த 

முத்தமிழ்ச் செம்மல்,

மூன்று வேதங்களும் தொழும் தைவம்,

முவ்வுலகும் போற்றும் செல்வம்,

நீ என கூறி உன்னை வேண்டாமல் 

இந்த உலக மாயையில் சுழலுவது நன்றோ.

சிவபிரானுக்கும் கங்கைக்கும் புத்திரனே,

இந்திரன் மகள் தேவயானையின் மணாளனே,

மயில் வாகனனே, மூலாதார மூர்த்தியே,

விசாகனே, வேதங்களில் வல்லவனே,

பிரமனுடன் விளையாடல் புரிந்தவனே,

வேடர் குல வள்ளியை அடைந்தவனே,

மலைகளில் குடியிருப்பவனே,

வீரனே, மூல காரணப் பொருளே,

வேலாயுதனே, தேவர்கள்தம் தலைவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...