364 - 432 தலைவலை அத்து - காஞ்சீபுரம்
உனது மயில் வேல் வெட்சி மாலை,
தேவயானை, வள்ளி, இவைகளை
பாட்டுக்குப் பொருளாக வைத்து,
பாமாலைகள் பாடவல்ல
புலவன் இவன் என கூற,
தக்க தர்ம்மங்கள் செய்பவன்
என உலகோர் கூற,
நல்ல பிறப்பை
என் ஆத்மா பெறாதோ.
அறிவுக்கும் மேலான
பதத்தில் சேரும் அருள்
எனக்கு கிட்டாதோ,
பாலாம்பிகை, சங்கரி,
நீல நிறமுள்ள எங்கள் தாய், அம்பிகை,
வேதங்களால் போற்றப்படும்
முக்கண் உடையவள்,
காமாட்சியம்மன்
திருக்கூட்டத்தில் வீற்றிருப்பவனே,
இந்திரன் வணங்கும்
பெருமாளே.
No comments:
Post a Comment