316 - 378 திரிபுரம் அதனை - பொதுப் பாடல்
திரிபுரத்தை ஒருநொடியில் எரித்த
சிவன் பெற்ற செலவமே,
அசுரர்கள் அச்சப்பட
மயிலை வேகமாக செலுத்துவோனே,
க்ரௌஞ்சமலையை ஊடுருவ
வேல் உடையோனே,
விநாயகருக்கு பின்பு பிறந்தவனே,
வள்ளியை அணைத்தவனே,
பாம்பின்மேல் உறங்கும்
அரியின் மருகனே,
அடியவர்கள் வினையும்
அமரர்கள் படும் துயரமும்,
அற அருளும் பெருமாளே.
No comments:
Post a Comment