Wednesday, 22 January 2025

perungkAriyam pOl 338 - 403

 

338 - 403 பெருங்காரியம் போல் - பொதுப் பாடல்

 

இந்த உடம்பின்மீது ஆசைவைத்து,

பிறந்து, படுத்து, இருந்து, நடந்து,

கடைசியில் பிணமானார் என இல்லாமல்,

இருந்த ஆசாபாசங்கள் மறக்க,

அஞ்சாதே என கூறி நீ வரவேணும்.

தம்பி லக்ஷ்மணனுடன் காட்டுக்குப் போய்,

அங்கே காணாதுபோன சீதையை,

எங்கே எனத் தேடிச் சென்று,

அனுமார்மூலம் இலங்கையில் 

நெருப்பை வைத்த இராமனின் மருகனே,

வேடர்களுடைய தினைப் புனத்தை 

காத்த வள்ளி மணாளனே,

குறை ஒன்றும் இல்லாதவனே,

உன்னைப் புகழும் தேவர் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...