378 - 451 இருவர் மயலோ - திருவருணை
வள்ளி தேவயானை மீது
நீ கொண்ட ஆசையோ,
வேறு நிகழ்ச்சியோ,
மற்றவர்கள் முறையிடுவது
உன் காதில் விழாதபோது,
என் மொழியை யாரேனும்
உன்னிடம் கூறுவார்களோ.
உன் பாத தூள் மலைக்கு சமானம்,
உன் திருவருள் எவ்வளவு பெரியது,
குருமூர்த்தியே, எல்லா உருவமாயும்
பழமையான உருவத்திலும்
அமைந்த வேலனே,
திருமாலும் பிரமனும்
உன்னிடம் அடைக்கலம்புக.
வேலாயுதத்தை சூரன் மேல் எறிந்தவனே,
அடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோய்
தூளாக்கிய திருவருணைப் பெருமாளே.
No comments:
Post a Comment