Saturday, 25 January 2025

makkatku kURarithAnathu 368 - 438

 

368 - 438 மக்கட்கு கூறரிதானது - காஞ்சீபுரம்

 

மக்கட்கு கூற அரிதானது,

கல்வியினால் எட்டமுடியாதது,

உவமை இல்லாதது,

தேடி அறிய முடியாதது,

வரிசைப் படுத்த முடியாதது,

சிவபிரான் கேட்க சொன்ன 

உபதேச வித்தாக இருப்பத,

மோக்ஷத்திற்கு காரணமாக இருப்பது,

வேதங்களாலும் எட்ட முடியாதது,

அதை எனக்கு உபதேசித்து அருள்வாய்.

உன் தாய்மாமன் திருமால் மெச்ச.

சூரனைக் கொன்ற வேலாயுதனே,

ஏழு உலகங்களையும் ஈன்ற காமாக்ஷி

திருவிளையாடல்கள் புரிந்த காஞ்சியில் உள்ள

கச்சபேசுரம் எனும் தலத்தில் 

வீற்றிருக்கும் பெருமாளே.

 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...