350 - 416 மோதுமறலி ஒருகோடி - பொதுப் பாடல்
யமன் என் உயிரைக் கொண்டுபோகும்போது
நீ எழுந்தருள்வாய்.
சூதாடி தோற்ற தருமபுத்திரன்,
மற்ற பாண்டவர்களுடன்
பன்னிரண்டு ஆண்டுகள்
காட்டில் வாழ்ந்தபின்,
விராட ராச்சியத்தில்
அஞ்ஞாதவாசம் செய்தபோது ,
துரியோதனாதிகள் பசுக்களைக்
கொள்ளை
கொண்டு செல்ல,
அவைகளை மீட்டுவந்து,
அரசு உரிமை கேட்பதற்கு
தூதனாக கண்ணனை அனுப்ப,
தூதில் வெற்றியின்றி கண்ணன் வர,
போரில் துரியோதனாதிகள் இறக்க,
அர்ச்சுனனின் சாரதியாக வந்த
திருமாலின் மருகனே,
தேவர்களுக்கு
சக்ரவர்த்தியாகிய பெருமாளே.
No comments:
Post a Comment