Friday, 10 January 2025

gukaiyil navanATharum 300 - 358

 

300 - 358 குகையில் நவநாதரும் - பொதுப் பாடல்

 

நவநாரதராகிய பெரும் சித்தர்களும்,

பிரமனும், சிவபிரானும், 

திருமாலும், இந்திரனும்,

சாத்திர நூல்களும், 

புராணங்களும், கலைகளும்,

ஓன்று சேர்த்துத் தேடியும் 

அறியமுடியாத உன் திருவடியை 

என்று சேர்வேனோ.

மகாபாரத வரலாற்றை 

ஒற்றை தந்தத்தால்

மேருமலையில் வியாச முனிவர் 

சொல்ல எழுதின

விநாயக மூர்த்தியின் 

பின்பு வந்த முருகனே,

கடலும் ஏழுமலைகளும் குலுங்க, 

சூரன் திகைக்க,

போர் செய்து 

தெய்வயானையை அடைந்த பெருமாளே.


 

 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...