343 - 409 மதிதனை இலாதபாவி - பொதுப் பாடல்
அறிவில்லாதவன்,
குருவார்த்தை கேள்க்காதவன்,
ஆகிய எனக்கு உன் தரிசனத்தால்
ஞான மார்க்கம் தந்தருள்வாய்.
சூரனை இருபிளவாக்க வேலை செலுத்தினவனே,
இனிய வார்த்தைகள் பேசும் அடியார்கள்
மீண்டும் பிறவாதபடி அருள்பவனே,
கங்கை பாம்பு இவை அணியும்
சிவபெருமானுக்கு குருமூர்த்தியானவனே,
அற்புத ஞானத்தை கொண்ட
வள்ளிமேல் ஆசை வைத்தவனே,
நவரத்தினமாலை
மார்பில் விளங்கும் பெருமாளே.
No comments:
Post a Comment