375 - 445 பரிமள மிகவுள சாந்து - திருவானைக்கா
ஒழுக்கமுறை அனுட்டிக்காத எனக்கு,
நீ திருவருள் பாலித்து
ஆண்டருளும் காலம் வருமோ.
காஞ்சி நகரில் வாழும் காமாக்ஷி,
உலகத்தை ஈன்ற உமாதேவி,
திருவானைக்காவில் வாழும்
அகிலாண்டநாயகி,
அருளிய குழந்தையே,
ராவணன் தலைகளை அரிந்த
ராமனின் மருகனே,
குறமகள் வள்ளியை அணைத்தவனே,
வேதங்களை ஆய்ந்துள்ள
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment