379 - 452 இருவினை அஞ்ச மலவகை - திருவருணை
இருவினைகள் அஞ்ச,
அஞானமும் நோயும் அகல,
நீ மயில்மீது வந்து அருள்வாக்கு கூற,
யானைமுகன் தம்பியே என அழைக்க,
தேவர்கள் மலர்மாலைகள் சொரிய,
என்முன் நீ வரவேண்டும்.
திரிபுரம் எரிய,
மன்மதன் உடல் எரிய,
ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து,
தேவியை இடபாகத்தில்
ஏற்றுக்கொண்டிருக்கும்
சிவபிரான் மகிழும் குருநாதனே,
திருவண்ணாமலையில் வள்ளியிடம்
மனம் மகிழும் பெருமாளே.
No comments:
Post a Comment