326 - 389 நிருதரார்க்கொரு காலா - பொதுப் பாடல்
அசுரர்களுக்கு யமனே,
தேவர்கள் பெருமாளே,
சிவன் குமரனே, வேலாயுதனே,
என்று போற்றி வணங்கும் என்னை,
என் பிறவிக்கடல் தீர்த்து,
உன் அடியார்களுடன் கூட்டி வைத்து,
ஞான உபதேசம் தரும் நாள் உண்டோ.
இந்திரன் செய்த தவத்தின் பயனாக
சிவனார் அருளியபடி
நீ தேவர்கள் சிறையை நீக்க,
சூரனையும் அவன் சேனைகளையும்
அழித்த பராக்ரமவீரனே,
தேவர்கள் தொழும் பெருமாளே.
No comments:
Post a Comment