313 - 375 தரணிமிசை அனையினிட - பொதுப் பாடல்
இந்த புவியில் வந்துபிறந்து,
வயதாகி, இறந்து,
சாம்பலாகிப் போகும் இந்த பிறவி,
இனியும் வராதிருக்க
உன் திருவடிகளை தந்தருள்வாய்.
அசுரர்கள் கூட்டம் அழிய,
அம்புகளை வரிசையாக செலுத்திய குமரனே,
தேவர்களை சிறையில் இருந்து விடுவித்தவனே,
இந்திரன், நான்முகன்,
முதலியோர் உன்னை போற்ற,
எதிரிகளோடு போர் செய்த வேலாயுதனே,
உலகத்தை உண்ட திருமாலும் காணமுடியாத
சிவபெருமான் அருளிய பெருமாளே.
No comments:
Post a Comment