401 - 478 ஏழுகடல் மணலை - சிதம்பரம்
எண்ணற்ற
அவதாரங்கள் எடுத்தாயிற்று,
இனியும் என்னால் முடியாது.
என் கடமை உன்னிடம்
அடைக்கலம் புகுவது தான்,
அதற்கு நீ அருளவேண்டும்.
பார்வதி ஈன்றருளிய முருகனே,
க்ரௌஞ்சகிரி பொடிபட மயிலில் வருபவனே,
ஏழு கடல்களும் கொந்தளிக்க
அசுரர்களை கொன்றவனே,
தேவர்களும் முனிவர்களும் துதித்த புலியூரில்
நடனம் செய்கின்ற பெருமாளே.
No comments:
Post a Comment