399 - 476 இருளுமோர்கதிர் - சிதம்பரம்
தேவலோகத்தை நான் அடைந்து,
என் இருவினைகளும், மும்மலங்களும் ஒழிய,
சிவஞானம் நான் மகிழுமாறு அருள்வாய்.
தக்ஷிணாமூர்த்தியானவரும்,
தமக்கு ஒரு குரு இல்லாதவரும்,
என் தந்தையுமான சிதம்பர
சிவபெருமான் அருளிய பாலகனே,
என்னை அடிமையாக ஏற்று
மெய்ஞ்ஞானத்தை அருள்வோனே,
வேதங்கள் விளங்கும் சிதம்பரத்தில் வாழ்பவனே,
வள்ளிமீது ஆசை கொண்ட பெருமாளே.
No comments:
Post a Comment