371 - 441 அனித்தமான ஊனாளும் - திருவானைக்கா
அழியக்கூடிய இந்த உடலை
நிலைத்து நிற்கச் செய்ய வாடுகின்ற
யோகியாக ஆகாமல்,
அறிவும் ஆசாரமும் உடையவனாகி,
யான் வேறு, இந்த உடல் வேறு என்ற நிலை
அடைய என்னை ஆண்டருள்வாய்.
ஆயிரம் நாமங்களை உடைய
திருமாலின் அன்பு மாறாத மருமகனே,
தேவர் உலகைக் காப்பாற்றியவனே,
கடப்பமாலை அணிந்த வயலூரானே,
திருவானைக்காவை மேவியவனே,
எல்லா தேவர்களுக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment