317 - 379 திரைவஞ்ச இருவினைகள் - பொதுப் பாடல்
இருவினைகளும் மும்மலங்களும் அழிய,
கங்கையில் மூழ்கி
நான் சிவபிரான் மகனே என மகிழ,
யானை முகத்தோன் தம்பியே எனவும்
அடியேனிடம் கருணை காட்ட நீ மயில்மீது,
வேல் ஏந்தி வந்து,
அரிய மறைபொருளை எனக்கு அருள்வாயே.
குதிரைகள் என்று நரிகளை மாற்றி,
ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த
குதிரைகள் இறக்கும்படி செய்த
மதுரை நடராஜ பெருமான் ஈன்ற மகனே,
க்ரௌஞ்ச மலையும், அசுரர்களும்,
எங்கள் இருவினைகளும்
எரிபட்டு அழிய வேலை செலுத்தினவனே,
வள்ளியுடன் மகிழ்ச்சியோடு
வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment