342 - 408 மதனேவிய கணையாலிரு - பொதுப் பாடல்
மன்மதன் விட்ட அம்புகளால்
இந்த உலகில் நடமாட முடியாதவனான நான்,
அனுபவ ஞானம் அடைந்து,
உன் அடியார்களோடு சேர,
உன் மயில்மீது ஏறி வந்து அருள்வாய்.
சூரியனும் சந்திரனும் தீப ஒளி காட்ட,
முனிவர்கள் வணங்க, வேதியர்கள் வேதம் ஓத,
நடனம் ஆடிய நடராஜராம்
சிவபெருமான் அருளிய குழந்தையே,
விதி கர்த்தா பிரமன் தங்கை
வள்ளியை அணைந்த முருகனே,
திருமாலின் மருகனே,
தமிழர்களின் பெருமாளே.
No comments:
Post a Comment