Thursday, 6 February 2025

makkaL thAyarkkum 501 - 407

 

501 - 407 மக்கள் தாயர்க்கும் - பொதுப் பாடல்

 

உற்றார் உறவினர்களால் 

என் மனம் சோர்வடைய,

யமனும் என்னைத் தேடிவர,

நான் இறப்பதற்குமுன் 

நனவும் கனவும் அற்று

நான் வாழ்வதற்கு நீ அருள்வாய்.

மன்மதனை எரித்து 

யோகத்தில் அமர்ந்த 

சிவபிரான் முன்னிலையில்

அவருக்கு ஞானப் பொருளை 

உபதேசித்தவனே,

உன் பத்தர்கள் பாடல்களுக்கு 

மனம் உருகும் முருகனே,

உனது பக்கத்தில் 

தேவயானையும் வள்ளியும்

உடன் வாழும் இனிய பெருமாளே.


 

 

 

sIrAna kOlakAla 500 - 199

 

500 - 199 சீரான கோலகால - விராலிமலை

 

ஆடம்பரமான கிரீடங்களையும், 

ஆறுமுகங்களையும்,

பன்னிரு தோள்களையும் 

இரு திருவடிகளையும்,

வேடர்மகள் வள்ளியையும், 

இந்திரன்மகள் தேவயானையையும்,

உனது திருக்கோலத்தையும்,

வேலையும் மயிலையும் கண்டு 

மகிழ்ந்தவனாக நான் இருப்பினும்,

தினம் இவைகளைத் 

தியானம் செயும் பேற்றை வேண்டுகிறேன்.

மதுரையில் அம்பலத்தில் ஆடின சிவனார்

இயற்றிய அகப்பொருள் 

எனும் நூலுக்கு பொருள் கூற

ஊமை பிள்ளைபோல் செட்டிகுலத்தில் தோன்றி,

திருவிளையாடல் புரிந்த தீரனே,

வரங்களை கொடுப்பவனே, குருநாதனே,

பாரதப் போரில் சூரியனை 

சக்கிரத்தால் மறைத்த கிருட்டிணன் மருகனே,

காவேரிக் கரையில் உள்ள வயலூரிலும்

விராலிமலையிலும் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

jeniththidumvhala chAzhalum 499 - 221

 

499 - 221 செனித்திடுஞ்சல சாழலும் - கும்பகோணம்

 

இந்த பிறப்பும் அதொடுவரும் வாழ்க்கையும்

ஒழிக்க வல்ல சிவயோகத்தையும்

ஞானத்தெயும் எனக்கு அருள்வாய்.

அசுரர்களுடைய சேனையை 

வளைத்து வென்றவனே,

முனிவர்களுக்கு அருள்பவனே,

வள்ளியை அணைப்பவனே,

சிவனிடத்துத் தோன்றிய சுடரே,

தவம் செய்வோர்களை அருளும் குழந்தையே,

கும்பகோணத்தில் வாழும் முருகனே,

தேவர்கள் பெருமாளே.


 

 

karuki aRivakala / poruvinmalai 498 - 203

 

498 - 203 கருகி அறிவகல / பொருவின்மலை - அத்திப்பட்டு

 

இந்த உலகில் பிறந்து இறந்து 

அழிகின்ற என்னை நினைத்து 

உன் திருவடிகளை தந்தருள்வாய்.

இமவான் பெற்ற 

காஞ்சியில் அருமையான தவம் செய்த 

பார்வதி பெற்ற மகனே,

ராவணன் பத்துத் தலைகளும் 

விழ அம்பை செலுத்தின

சக்ராயுதம் ஏந்தியவன், 

ஆதிசேஷன்மேல் பள்ளிக்கொள்பவன்,

ஆன திருமாலின் மருகனே,

பச்சைமயில் மீது வந்து

கடல் வற்ற, அசுரர்கூட்டம் அழிய,

இந்திரன் குடியேறச் செய்த இளையவனே,

கயல் மீன்களோடுள்ள 

அத்திப்பட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

athimaDankakka 497 - 422

 

497 - 422 அதிமதங்கக்க - காஞ்சீபுரம்

 

தெய்வயானையை அணைத்தவன்,

காட்டில் சென்று 

வள்ளி மீது மோகம் கொண்டவன்,

வேலாயுதன், 

அன்பர்கள் துக்கத்தை நீக்குபவன்,

என பூஜித்து உன் திருப்புகழைப் பாடும்

என்னை கண்பார்த்து அருள்வாய்.

தக்கன் நடத்திய யாகத்துக்குப் போயி,

திருமாலும் பிரமனும் 

அச்சம் உற தாக்கியும்,

அட்ட திக்கு பாலர்கள் 

சேனை நிலைகுலைத்துப் போகவும்

தாக்ஷயணி வருத்தம் தீரவும்,

தக்கன் அவமானப்பட்டு ஒழியவும்,

சரசுவதி பங்கம் அடைந்து வெட்கப்படவும்,

கோபித்து வெற்றி பெற்ற 

சிவபிரான் வணங்க

காஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

thalangaLil varumghana 496 - 290

 

496 - 290 தலங்களில் வரும்கன - பெருங்குடி

 

தாய் வயிற்றில் பிறந்து,

தமது பொலிவு வலிமை குன்ற

இறந்துபோகும் இப்பிறப்பை 

ஒழிக்க மாட்டேனோ.

இலங்கையில் வீடுகள் 

தீ பற்றி எரியச் செய்த அனுமனோடு

கடல் அஞ்ச வந்த ராமனின் மருகனே,

க்ரௌஞ்சமலை தூளாக வேல் எறிந்தவனே,

தமிழ் விளங்கும் வயலூரானே,

சோலைகளும் கரும்பும் 

வாழைகளும் நிறைந்த

பெருங்குடிக்கு அருகில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

sAlanedunAL madanthai 495 - 225

 

495 - 225 சாலநெடுநாள் மடந்தை - கொடைநகர்

 

இந்த புவிமீது பிறப்பை அடைந்து

பாழான நரகில் போய்ச் சேராமல்

உனது பாதமலர்களை அடைய 

அன்பை அருள்வாய்.

விஷத்தை உண்டவர், 

கங்கையை சூடினவர்,

ஆன சிவபிரான் தந்த முருகனே,

கஜேந்திரன் ஆதிமூலமே என கூவ

தஞ்சம் அளித்த நாராயணனின் மருகனே,

தினைப்புனத்தில் வாழ்ந்த 

வள்ளியை அணைந்தவனே,

சூரன் ஒடுங்க வேலை செலுத்தினவனே,

கொடைநகரில் வாழ வந்த பெருமாளே.


 

 

pAthALamAthi /DUthALarOdu 494 - 200

 

494 - 200 பாதாளமாதி / தூதாளரோடு - விராலிமலை

 

இந்த உலக மாயையில் வாழ்ந்த என்னை,

உன்னுடைய பாததூள் பட்டு,

நரகில் வீழாமலிருக்க அருள்வாய்.

யமனும் அவன் தூதர்களும், 

திருமாலும், பிரமனும் அஞ்சி ஓட,

பெரியோர்கள் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓத,

சூரன் இறக்க வேலை செலுத்தியவனே,

வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,

பூக்களின் மீதி சாதாரி (பந்துவராளி), 

தேசி (தேஷ்), நாமக்கிரியை,

எனும் ராகங்களைப் பாடும் 

வண்டுகள் நிறைந்த சோலைகளும்,

உள்ள-கோனாடு எனும் நாட்டில் உள்ள

விராலிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

 


 

kadalai payaRodu 493 - 353

 

493 - 353 கடலை பயறொடு - பொதுப் பாடல்

 

பெரிய குடம் போன்ற வயிறுடைய

கணபதியின் பின் தோன்றிய 

ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே, 

என உன்னை பணியாமலிருக்கும்

என் பாழடைந்த தன்மை 

என்னை விட்டு நீங்காதோ.

யமன், சூரியன், சந்திரன், 

இவர்கள் பயப்பட,

அசுரர்களையும் எட்டு கிரிகளையும் 

வேலாயுததால் அழித்தவனே,

கங்கை கொந்தளிக்க, 

முனிவர்கள் அரகர என போற்ற,

தேவர்கள் சிறை நீங்க,

சரவணப்பொய்கையில் 

வளர்ந்த அழகிய பெருமாளே.


 

 

iraththamum chiyum 492 - 253

 

492 - 253 இரத்தமும் சியும் - திருப்பெருந்துறை 

 

உலகமாயை மிகுந்து வாழும்

இந்த உடலால் 

ஏதேனும் பயன்  உண்டோ.

போருக்கு வந்த சூரனுடைய 

உடல் அழியவும்,

கடல் வற்றவும், 

க்ரௌஞ்சமலை பொடிபடவும்

வேலாயுதத்தை எறிந்தவனே,

உலகில் குருவாய் விளங்கும் 

உனது தந்தைக்கு

வேத உபதேசம் அளித்த பரமகுருவே,

சிவபிரான் ஞான சொற்பொழிவு 

செய்த திருப் பெரும் துறையில் 

வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.


 

 

niththap- piNikodu 491 - 216

 

491 - 216 நித்தப்பிணிகொடு - கருவூர்

 

நோய்களுடன் கூடிய இவ்வுடல்,

ஐம்பூதங்களின் சேர்க்கையால் 

தெளிவான உண்மையை உணராமல்,

உலக மாயையில் சுற்றுகின்ற என்னை

உன் அடியார்களுடன் 

சேர்ப்பித்து ஆண்டருள்வாய்.

அசுரர்கள் பொடிபட 

வேலை செலுத்தினவனே,

கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனுக்கு

தமது இடபாகத்தை தந்தவர் 

- சங்கரநாராயணர் –அருளிய குழந்தையே,

வள்ளிநாயகியின் உள்ளத்தில் 

வீற்றிருக்கும் குமரனே,

அடியார்களை ஆட்கொள 

கருவூரில் அமர்ந்த பெருமாளே.


 

 

pasaiyatra udalvatra 490 - 311

 

490 - 311 பசையற்ற உடல்வற்ற - விருத்தாசலம்

 

துன்பமே கொண்ட பிறப்பைத் தவிர்த்து,

உன் திருவருளைத் தரும் ஒருநாள் வருமோ.

அசுரர்கள் மடிந்து ஒழிய,

இந்திரனும் தேவர்களும் மலர் சொரிய,

போரில் வெற்றி அடைந்தவனே,

கணக்கற்ற வடிவங்கள் எடுத்த

திருமாலின் மருகனே,

உன் அருள் பெற்ற 

சிவ பத்தர்கள் நிரம்பியுள்ள

முது குன்றம் எனும் விருத்தாசலத்தில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

gnAnAvibhUshaNi 489 - 372

 

489 - 372 ஞானாவிபூஷணி - பொதுப் பாடல்

 

ஞானத்தை அளிப்பவள், 

காரணி, மோகினி,

சிவனை பூஜித்தவள், பார்வதி ஆன

உமாதேவியின் தலைவரான 

சிவபெருமானுக்கும் குருவே,

அவருக்கு வேத ஆகமங்களை அருளியவனே,

சிவபெருமானுக்கும் ஈசுவரிக்கும் குழந்தையே,

வள்ளி தேவயானை கணவனே,

தேவர்கள் வணங்கும் மயில்வீரனே,

உன்னை வணங்கும் எனக்கு 

கலைஞானத்துடன் பாட அருள்வாயே.

வாதத்தில் தோற்ற சமணர்களை 

கழுவில் ஏற்றியவனே,

பாண்டியனின் கூன் 

நீங்குமாறு செய்தவனே,

ராவணனைக் கொன்ற 

ரகுராமனின் மருகனே,

சூரர்கள் இறக்க 

தேவர்கள் பொன்னுலகம் புக

சேனாபதியாக வந்தவனே,

வாக்குக்கு எட்டாத திருவாக்கை உடையவனே,

ஆசாபாசங்களை நீக்குபவனே.



 

 

sariyaiyALarkkum 488 - 154

 

488 - 154 சரியையாளர்க்கும் - கதிர்காமம்

 

சரியை கிரியை யோக மார்க்கங்களில் 

உள்ளோர்க்கும் எட்டமுடியாததும்,

வேறுவழிகளிலும் நெருங்க முடியாததுமான

உண்மை ஞானத்தை நான் அடைவேனோ,

மதில் சூழ்ந்துள்ள வயலூருக்கு உரியவனே,

சூரன் விழ வேலை செலுத்தினவனே,

மென்மையான திருப்புகழை ஓத அருளியவனே,

செழித்த மரங்களுள்ள ஈழ நாட்டில்

கதிர்காம மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

Wednesday, 5 February 2025

appadi EzhumEzhum vakuththu 487 - 326

 

487 - 326 அப்படி எழுமேழும் வகுத்து - பொதுப் பாடல்

 

அவ்வாறு பதினான்கு 

உலகங்களையும் படைத்தவரும்

சரசுவதிதேவியின் கணவருமான

பிரமன் எழுதியுள்ள விதிப்படி,

பலபிறவி எடுத்து, 

இறந்து அலைக்கின்றது

இல்லாமல் வர நீ அருள்வாய்.

காட்டில் வசிக்கும் 

வள்ளியை அணைப்பவனே,

கற்பக மரங்கள் உள்ள 

வானுலகத்துக்கு வாழ்வை தந்தவனே,

மலையில் இருப்பவனே, 

வேதத்தில் உள்ளவனே,

மாலை அணிந்தவனே,

எழுகிரிகளும் சூரனும் பொடிபட 

வேலைச் செலுத்தினவனே.


 

 

Tuesday, 4 February 2025

karuppuvilil maRuppakazhi 486 - 067

 

486 - 067 கருப்புவிலில் மறுப்பகழி - பழநி

 

உலகமாயையில் மயங்காமல்,

மனது உன்னில் நிலைத்து நிற்க,

உன்னை புகழ்ந்து பாடும் வகையை 

எனக்கு அருள்வாய். 

சிவன் கேட்க, 

உபதேசித்த பிராணவப் பொருளை

எனக்கும் உபதேசிப்பாய்.

மலையையும் அசுரர்களையும் கடல்களையும்

கலக்கவல்ல மயில் மீது வருபவனே,

பன்னிரண்டு புயங்கள் உடையவனே,

இலக்கிய தமிழ் தெரிந்த 

வயலூர் முருகனே,

திருப்புகழை உரைப்பவர்கள் 

படிப்பவர்கள்

வறுமையும் பகைமையும் 

தொலைக்கும் பெருமாளே,

இசைப் பிரியனே, 

பழநிமலையில் அமரும் பெருமாளே.


 

 

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...