Monday, 3 February 2025

vinaikkinamaAkum 464 - 144

 

464 - 144 வினைக்கினமாகும் - திருத்தணிகை

 

உலகமாயையில் நான் விழுந்துவிடாமல்,

கலைவல்லமை உடைய புலவர்கள்

இசையுடன் சீராக ஓதுகின்ற

உன் புகழை நானும் ஓதும்படியான 

ஞானத்தை தந்தருள்வாய்.

தினைப்புனத்துக்குப் போய் 

வள்ளியை அணைத்தவனே,

க்ரௌஞ்சமலை பிளக்க கடல் வற்ற

சூரனை வெல்ல வீரவேலை செலுத்தினவனே,

திருப்புகழ் ஓதும் கருத்துள்ள 

அடியார்கள் கூடுகின்ற

திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...