459 - 213 விந்துபேதித்த வடிவங்களா - கந்தனூர்
இவ்வுலகில் பல உருவங்களாய் தோன்றி,
காலம் கழித்ததுவிட்டு,
ஞானநிலையை
இந்த கணத்திலேயே வந்து கொடு
என முறையிடுகின்றேன்.
தாய் தந்தையர் குழந்தைமேல்
காட்டும் கருணை போல்
உன் மனம் சற்று
என்மேல் கருணை காட்டாதோ.
அசுரர்கள் மாண்டுபோக வேலை செலுத்தி
தேவர்கள் குடியேற அருள்புரிந்தவனே,
என் உயிருக்கு உதவி செய்தவரும்
என் தந்தையும் ஆகிய
சிவபெருமானும் பார்வதியும்
விளங்கும் கந்தனூரில்
பராசத்தி புகழும் எந்தை
பூஜித்து மகிழும் தம்பிரானே.
No comments:
Post a Comment