Tuesday, 4 February 2025

iruvinai UNpa 475 - 453

 

475 - 453 இருவினை ஊண்ப - திருவருணை

 

என் வினைப்பயனால் வந்த 

துன்பங்களை நீங்கப்பெற்று

உன் திருவடிகளை 

அடையும் பாக்கியத்தை பெறுவேனோ.

திருவண்ணாமலையில் உயர்ந்து ஓங்கிய

கோபுர வாசலில் தொழவரும் 

அடியார்களின் தோழனே,

எல்லா உலகத்தையும் 

உண்ட திருமாலின் மருகனே,

புலிக்கால் கொண்ட வ்யா க்ரபாதருடன்

சர்ப்பஸ்ரேஷ்டரான பதஞ்சலி முனிவரும்,

தரிசித்த நடராஜரின் மகனே,

மலைகளை தூளாக்கும் 

தோகை உடைய மயில்வாகனனே,

இலக்கிய நூல்களில் வல்லனே,

சத்திய சிரேஷ்டனே,

வஜ்ராயுதத்தை உடைய 

தேவேந்திரனுக்கு பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...