473 - 127 கவடுற்ற சித்தர் - திருத்தணிகை
வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும்,
ஆறு சமயங்களின் பெயரில்
வாதம் செய்வோரும்,
கடவுளின் பெயரில்
பொருளைத் தேடும் மக்களும்,
அனைத்திலும் ஒன்றுபட்டு கலந்து,
அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும்
உனது திருவடிகளின் பெருமையை
சற்றேனும் உணரமாட்டார்களோ.
க்ரௌஞ்சகிரியும்
சூரனின் ஏழு குலகிரிகளும்
- ஆக எட்டுமலைகளையும் அழித்து,
சூரனை சம்காரம் செய்தவனே,
தினை புனத்தில் வள்ளியை
தொழுது புகழ்ந்த முத்தனே,
அழகிய மதில்கள் சூழ்ந்த
திருத்தணியில்
தேவாரத்தை தந்த பெருமாளே.
No comments:
Post a Comment