466 - 292 குதிபாய்ந்திரத்தம் - மதுராந்தகம்
இந்த உடல்தான் சகலசெல்வமும்
என மேற்கொண்டு திரியாமல்,
உனது திருவடியை பற்றிக் கொண்டு
வாழும் கருத்தை எப்போது தருவாய்.
கதை, சார்ங்கம், வாள், பாஞ்சஜன்யம்,
சுதர்சன சக்கிரம், தரித்த திருமாலின் மருகனே,
தினை புனத்தில் வாழும்
வள்ளியின் மணாளனே,
மன்மதனுக்கு யமனாக வந்த
சிவபிரானுக்குக் குழந்தையாக
தாமரையில் பிறந்த குமரேசனே,
மதுராந்தகத்தில்
அமர்ந்துவிளங்கும் பெருமாளே.
No comments:
Post a Comment