334 - 397 பாணிக்குட் படாது சாதகர் - பொதுப் பாடல்
கையால் தொடமுடியாதது,
யோகவழியால் காணமுடியாதது,
தர்க்க வாதிகளால் பேசித் தெரிய ஓணாதது,
பாடங்களிலும், உபாயத்திலும்
மாட்டிக் கொளாதது,
த்யானமுறையினால் அடைய முடியாதது,
நூல்கள் வழியால் பிடிக்க முடியாதது,
இத்தகைய பொருளை பெறுவதற்கு
உன் திருவடிகளை வணங்க மாட்டேனோ.
மலையை வேலாயுதத்தால் அழித்து,
இந்திரனுடைய ஆபத்தை கெடுமாறுசெய்து,
உலகை ஆண்டருளும் பெருமாளே,
வேடப் பெண்மணியின்
திருவடியைச் சூடினவனே,
பிரமன் கூறமுடியாத உட்பொருளை
சிவபெருமானுக்கு நல்ல ஆசிரியராக இருந்து
உபதேசித்த குருநாதனே,
தேவர்கள் தலைவனே.
No comments:
Post a Comment