333 - 396 பருதியாய் பனி மதியமாய் - பொதுப் பாடல்
சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம்,
நீர், நெருப்பு, காற்று,
நக்ஷத்திரங்கள், மற்று பலவுமாகி,
கிழமைகள், ஏழு உலகங்கள்,
வேத, பிரமன், திருமால், இவை எல்லாமாகி,
அழிவில்லாத பரம்பொருளின்
திருவடியை நாடாமல்
வீணாகத் திரிவேனோ.
துரியோதனாதி நூறுபேரும்
பதினெட்டு நாட்களில்
போர்க்களத்தில் மாள,
அர்ச்சுனனுடைய சாரதியாக
இருந்த திருமாலின் மருகனே,
அசுரர்கள் இரத்தம் தோய்ந்த
வேலை ஏந்தினவனே,
அழகிய மயில் வீரனே,
வஜ்ராயுதம் ஏந்திய
இந்திரனின் லோகத்தை காத்தவனே,
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment