329 - 392 நெடிய வடகுவடு இடியவும் - பொதுப் பாடல்
வடதிசையிலுள்ள மேருமலை இடியவும்,
எழுகிரியும் நெறியவும்,
ஆதிசேஷனுடைய பணாமுடிகள் கிழியவும்,
பூமி அதிரவும்,
செய்த ஒப்பில்லாத மயிலும்
சேவல் கொடியும் உடைய
உனது கருணையும், பெருமையும்,
வள்ளியை அணைக்கும் தோளும், முருகன்,
ஆறுமுகன் எனும் திருநாமங்களையும்
இயல் தமிழில் இணைத்து குற்றமற பாடி
நான் ஓதும் ஒருநாள் கிடைக்குமோ.
சூரன் அழிய, மாமரம் வீழ,
க்ரௌஞ்சமலை பொடிபட,
ஒளிபடைத்த வேலாயுதனே,
தேவயானையின் தலைவனே,
குருபரனே, சரவணனே,
கங்கையும் கார்த்திகைப் பெண்களும்
எங்கள் குழந்தை என
பாராட்டும்படி பார்வதி பெற்றெடுத்த
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment