311 - 373 தசையும் உதிரமும் நிணமொடு - பொதுப் பாடல்
அறிவில்லாதவர்கள் கொண்டுள்ள
மார்கத்தை நான் விட்டொழிந்து,
என் இருவினைகளும்
மும்மலங்களும் நீங்க,
என் மமகாராம் ஒழிய,
அரிதான உபதேசத்தை
அடியேனுக்கு அருள்வாயே.
இமயமகள் பார்வதி,
சப்தமாதர்கள் தன்னை வணங்க
திருவருணையில் வீற்றிருக்கும் தேவி,
ஏழு உலகங்களுக்கும்
அருள் புரிந்த உமா தேவி,
பெற்றருளிய குழந்தையே,
அக்னிசொரூபியான சிவனுக்கு
உபதேசத்தை அருளியவனே,
தேவயானையுடனும், வள்ளியுடனும்,
தேவாரத்துடனும் விளங்கும் பெருமாளே.
No comments:
Post a Comment