306 - 366 சிவஞான புண்டரிக - பொதுப் பாடல்
சிவஞானம் எனும் தாமரையில் அமர்ந்து,
சிவமாதுடன் இணையும் அன்பை
அனுபவிக்கத் தெரியாமல்,
நான் அழிந்து போவேனோ.
உன் அடியார்களுடன் சேரவும்,
என் மும்மலங்களும் இருவினைகளும்
அகலவும் நீ வரவேண்டும்.
என் தந்தை சிவபிரானின்
இடம் அமரும் கௌரி, சிவகாமசுந்தரி,
விநாயகருக்கு அன்று மாதுளம் கனியை
அளித்த பார்வதி அருளிய பாலகனே,
எனக்கு இறவா வரம் தந்து,
உயர்நிலை அருள்வாய்.
மலைகளில் வாழும் மயில்வாகனனே,
குறிஞ்சி நிலத்தில் குடியிருக்கும் வேலவனே.
No comments:
Post a Comment