362 - 430 சீசி முப்புரக் காடு - காஞ்சீபுரம்
வெறுக்கத்தக்க மும்மலங்களை
- ஆணவம், கன்மம், மாயை - அழிய,
ஆன்மா முதுநிலை பெற,
ஒழுக்க வழியில் சென்று
உன் திருவடிகளை உணராமல்,
இந்த பாசவலை எனக்கு வேண்டாம்,
எனக்கு உன் தரிசனம் தந்தருள்வாய்.
சூரனை அழித்து,
தேவர்கள் துயரத்தை நீக்கினவனே,
சிவபிரான் பாகத்தில் அமர்ந்த
பார்வதி பெற்ற குருநாதனே,
பல திருத்தலங்களிலும்,
காஞ்சீபுரத்திலும் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment