376 - 448 இமராஜனிலாவதெறிக்கும் - திருவருணை
சந்திரன் வீசும் கனலாலே,
மன்மதன் தொடுக்கும்
மலர் பாணங்களாலே,
உனைப் பிரிந்து தவிக்கும் இப்பெண்ணுக்கு
ஏதேனும் ஒருவழி கூறி அருள்வாய்.
குமரா, முருகா, சிவனுக்குக் குருநாதனே,
வள்ளியை அணைத்தவனே,
அமரர்களுக்கு அருளியவனே,
திருவண்ணாமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment