Sunday, 19 January 2025

suruthi vekumuka purANa 309 - 369

 

309 - 369 சுருதி வெகுமுக புராண - பொதுப் பாடல்

 

வேதமும் பலபுராணங்களும்.

சரியை மார்கத்தில் 

கோவிலுக்கு தொண்டு செய்பவர்களும்,

கிரியை மார்கத்தில் 

மலர்தூவித் தொழுபவர்களும்,

யோக நிஷ்ட்டையில் இருப்பவர்களும்,

சமயவாதிகளும், 

உணரமுடியாப் பரம்பொருளை அடைந்து,

உலகத்தொல்லைகள் ஒழிய, 

உன்னை தியானித்து,

உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து,

உன் திருவடிகளைப் பாட 

அருளமாட்டாயோ.

உரலோடு மோதியும்,

அலகை எனும் பூதத்தின் உயிரைப் பருகியும்,

குவளையாபீடம் எனும் யானையை வென்றும்,

சகடாசுரனை கொன்றும்,

சாதாரண குழந்தைபோல 

தவழ்ந்தும் வரும் திருமாலின் மருகனே,

வேலாயுதனே, மயில் வீரனே,

தேவயானையையும் வள்ளியையும் அணைந்தவனே,

சேனாபதியே, 

நூறுகோடி தேவர்களுக்கு தம்பிரானே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...