Thursday, 26 December 2024

aiyumuRu nOyum 160 - 189

 

160 - 189 ஐயுமுறு நோயும் - வள்ளிமலை

 

உயிர் உய்ய நல்ல யோகவழிகளை அணுகாமல்,

ஆசைகளைத் தூண்டும் ஐம்பொறிகளால்,

துன்பம் அடைகின்ற என்னை,

உனது திருவடிகளில் சேருமாறு அருள்வாய்.

வள்ளியை அணைத்தவனே,

தேவர்கள் வாழ, கடலில் மாமரமாக நின்ற 

சூரனுடன் போர் புரிந்தவனே,

உலகத்தை முழுமையாக ஆளும் ஐயனே,

வல்லம் எனும் தலத்தில் வாழ்பவனே,

மயில்வீரனே, முத்தமிழ் கடவுளே,

வள்ளிமலையில் வாழ்பவனே.


 

 

alli vizhiyAlum 159 - 188

 

159 - 188 அல்லி விழியாலும் - வள்ளிமலை

 

யமன் என்னை இகழ்ந்து

என் உயிரைக் கொண்டுபோகும் நாளில்

அடியேன் உய்யும்பொருட்டு

ஒப்பற்ற அழகிய திருவடிகளைத் தந்தருள்வாய்.

வேதங்களில் காண இயலாத பொருளை 

சிவபிரானுக்கு உபதேசித்த குருநாதனே,

வள்ளிமலையில் சென்று வாழ்கின்றவனே,

வலிமையான அசுரர்கள் மாளவும்,

நர்குணமுள்ள தேவர்கள் வாழவும்,

கூரிய வேலைச் செலுத்தினவனே,

வள்ளிமலையில் எழுந்தருளிய வள்ளிமணாளனே.

 

 


pAttil urukilai 158 - 187

 

158 - 187 பாட்டில் உருகிலை - தீர்த்தமலை

 

மனமே, பாட்டின் பொருளை 

கேட்டும் அறிந்தும் உருகவில்லை,

யமன் வருவதுகண்டும் 

இறைவனிடம் உருகவில்லை,

மோக்ஷத்தை நாடவில்லை,

முருகனின் திருப்புகழை ஓதினால்

உன் நல்வினை தீவினை இவைகளை 

அழித்து உன்னை அருள்வான்.

யமனை உதைத்து,

மன்மதனுடைய உடலை சாம்பலாக்கி,

தக்ஷனின் யாகத்தை அழித்து,

அவன் தலையை வெட்டி, 

ஆட்டின் தலையை அங்கெ பொருத்தின

உமாதேவியின் கணவரான சிவபிரானின் பாலனே,

திருப்பாசுரம் எழுதின ஏட்டை

வைகை ஆற்றில் எதிர்த்து ஒட்டி,

நெருப்பில் இட்ட ஏட்டை 

பச்சையாகக் காண்பித்த குருநாதனே,

தீர்த்தமலையில் காவல் தெய்வமான பெருமாளே,

உன்னை வணங்க அருள் புரிவாய்.


 

 

sAnthamil mOkaveri 157 - 186

 

157 - 186 சாந்தமில் மோகவெரி - திருவேங்கடம்

 

இந்த உலகமாயையில் புத்தித் 

தடுமாற்றத்தை அடைந்த

நான் துணையின்றி 

யமனுலகம் போவது சரியோ.

அழகி வள்ளியின் கணவா,

விசாக நக்ஷத்திரத்தில் 

ஜோதிப் பிழம்பாக வெளிபட்டவனே,

சரவணக் கடவுளே,

அமராவதியை மீட்டினவனே,

வேதங்களால் துதிக்கப் படுபவனே,

தேவயானையின் மணவாளனே,

என்றும் இளையவனே,

திருவேங்கட மாமலையில் உறைபவனே,

அடியார்கள் வேண்டுகோளை

வெறுக்காமல் அருள்புரிகின்ற பெருமாளே.

 


 

saravaNa bhavaniDhi 156 - 185

 

156 - 185 சரவண பவநிதி - திருவேங்கடம்

 

சரவணபவனே, நிதியே, ஆறுமுகனே,

குமரகுருபரனே என ஓதும் உன் அடியார்களுக்கு

நோயில்லா வாழ்வும் மறுபிறப்பில்லா அருளும்

கொடுத்து காப்பாற்றுபவனே,

உன் அருள் எனக்கும் கிடைக்காதோ.

கணபதிக்கு இளையவனே,

பாடி வேண்டுவோருக்கு நர்கதி அளிப்பவனே,

திரிபுரங்களை எரித்த சிவனின் குமரனே,

திருப்பேரூர், திருத்தணிகை, சிவகிரி, திருவேங்கடம்

எனும் தலங்களில் உறைபவனே,

அடியார்கள் உள்ளத்தில் குடிகொள்பவனே,

நரசிங்கருக்கு மருகனே,

உமாதேவி தந்த முருகக் கடவுளே,

ஏழு உலகமும் நடுங்க மயிலில் வருபவனே,

அரகர சிவசிவ பெருமாளே.


 

 

kaRuththathalai veLiRu 155 - 184

 

155 - 184 கறுத்ததலை வெளிறு - திருவேங்கடம்

 

எனக்கு வயதாகுமுன் உன் அடியார்களுக்கு 

நான் தொண்டுபுரிய மாட்டேனோ.

மீனாக வந்து கடலுக்கு அடியிலே இருந்த 

வேதங்களை மீட்டினவனும்,

கடலில் அணைகட்டி 

தம்பி லக்ஷ்மணனும் அனுமனும் மகிழ

ராவணனின் பத்துத் தலைகளும் அறுபட்டு வென்ற

ராமனாகவும் வந்த திருமாலின் மருகனே,

வேலாயுதனே, திருவேங்கடமலைமீது 

எழுந்தருளிய பெருமாளே.


 

 

orupathum irupathum 154 - 182

 

154 - 182 ஒருபதும் இருபதும் - திருமலை (ஸ்ரீ சைலம்)

 

தொண்ணூற்றியாறு தத்துவங்களின் 

உண்மையை உணர்ந்து,

உன்னை தியானித்து,

உந்த உலகில் வீணே அலைந்து திரியாமல்,

உன் தரிசனம் கிடைக்க அருள்தாராய்.

பழம், கடலை, பயிறு, எனும் 

பணியாரங்களை உண்டவரும்,

மகாபாரதத்தை மேருமலையில் எழுதினவருமான 

கணபதிக்குத் தம்பியே,

உன் அடியார்கள் உள்ளம் உருக,

அவர்கள் பிறவிநோய் தொலைய 

அருளும் பெருமாளே,

ஸ்ரீ சைலத்தில் வாழ்பவனே.


 

 

burbuDamenAma 153 - 181

 

153 - 181 புற்புதமெனாம - திருச்செங்கோடு

 

இந்த நீர்க்குமிழி போன்ற வாழ்வில்,

மனைவி, மக்கள், புதல்வர், 

இவர்களோடு இருக்கும் எனக்கு,

உன்னை வணங்கும் அன்பை 

நீ உபதேசித்து அருளவேண்டும்.

முத்தமிழிலும் முதல்வனே,

சக்ரத்தையும் கதையையும் 

ஏந்திய திருமால் மருகனே,

வாதில் தோற்ற சமணர்களை

கழுவில் ஏற்றிய சீகாழிப் பெருமாளே,

வள்ளி மணாளனே,

அசுரர் குலத்துக்கு யமனே,

திருச்செங்கோட்டில் வாழும் தேவர் பெருமாளே.

 

 


baththar gaNapriya 152 - 180

 

152 - 180 பத்தர் கணப்ரிய - திருச்செங்கோடு

 

அடியார்கள் மீது அன்புள்ளவனே,

நடனம் ஆடும் மயிலை 

வாகனமாகக் கொண்டவனே,

நாலு திக்குகளில் உள்ளவர்களும் வியக்க

ஒலிமிகுந்துள்ள திருப்புகழை

அடியேன் உலகில் பரவும்படி 

செய்வித்த அருளை ஒருநாளும் மறவேன்.

தினைப்புனத்தை காவல் செய்த 

குறத்தி வள்ளியை அணைந்தவனே,

பராசத்தியை இடபாகத்தில் வைத்த சிவபிரான்

மெச்சும்படி வேத நூலின் 

மெய்ப்பொருளை உபதேசித்தவனே,

நாகமலையில் வாழும் 

தேவர்கள் போற்றும் பெருமாளே.


 

 

kodiya maRaliyum 151 - 179

 

151 - 179 கொடிய மறலியும் - திருச்செங்கோடு

 

கொடியவனான யமனுடன் 

நான் போராடும்போது,

தேவர்கள் இருபுறமும் 

தமிழ் பாடல்களையும் வேத கீதங்களையும் பாட,

முன்னொருமுறை திருவண்ணாமலையில் 

நீ வந்ததுபோல வரவேண்டும்.

சடாமுடி, பாம்பு, மழு, பிறைச்சந்திரன்,

கங்கை இவைகளை தரித்தவரும்,

பார்வதியை இடபாகத்தில் வைத்து,

மேருமலையை வில்லாக தரித்தவருமான 

சிவபிரானுக்குப் புதல்வனே,

நாகமலை எனும் திருச்செங்கோட்டில் இருப்பவனே,

தேவயானையை மணந்தவனே,

குலகிரிகள் இடிபட, அசுரர்களை வென்றவனே,

இந்திரன் துதித்த பெருமாளே.


 

 

Wednesday, 25 December 2024

kAlanidath- thaNukAthE 150 - 178

 

150 - 178 காலனிடத் தணுகாதே - திருச்செங்கோடு

 

யமனுடைய ஊரை அணுகாத வகைக்கும்,

மீண்டும் பிறவா வகைக்கும்,

அகத்தியருக்கு நீ அருளிய 

உபதேசம் எனக்கும் தந்தருள்வாய்.

திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே,

ஞானிகளை விட்டுப் பிரியாதவனே,

நான்கு வேதங்களின் பொருளாக உள்ளவனே,

திருச்செங்கோட்டில் பெருமாளே.

 

 


anpAka vanthu 149 - 177

 

149 - 177 அன்பாக வந்து - திருச்செங்கோடு

 

அன்புடன் உன் பாதங்களை வணங்காமல்,

ஆசாபாசங்களில் மூழ்கி,

உலக மாயையில் அலைந்து திரிவேனோ.

சபையில் நடனம் ஆடும் 

சிவபிரான் தந்த குமரனே,,

உன் அடியார்கள் பிறப்பை 

அழிக்கும் வேலை உடையவனே,

கந்தா என்று அழைக்கும்போது,

செம்-சேவலுடன் வரவேணும்,

திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.

 


 

vAsiththuk- kANoNAthathu 148 - 176

 

148 - 176 வாசித்துக் காணொணாதது - திருசிராப்பள்ளி

 

புத்தகத்திலிருந்தும் பூஜைவழியிலும் 

அறியமுடியாததும்,

வாக்கினால் சொல்லமுடியாததும்,

குற்றமுள்ளோர்க்கு விளங்காததும்,

அன்பர்கள் நெஞ்சில் நின்று நீங்காது நிற்பதும்,

நாதத்திற்கு அப்பால் இருப்பதும்,

ஆகாயத்திற்கு முடிவில் இருப்பதும்,

இவ்வுலகிற்கு ஆதியானதும், 

ஆன உண்மையை

என் உள்ளத்தால் கன்டு 

சிவயோகத்தை அடைய நீ உபதேசித்து அருள்வாய்.

நீயே விரும்பி வள்ளியை வணங்கினவனே,

வயலூரா, மயில்வாகனனே,

உயர்ந்த மேகமண்டலத்தைச் சேரும்

திருசிராமலையில் எழுந்தருளிய

சிவபிரானுக்கு குருவே,

தேவர்கள் தலைவனே.


 

 

bhuvanaththoru 147 - 175

 

147 - 175 புவனத்தொரு - திருசிராப்பள்ளி

 

இந்த பூமியில் பிறந்து

விதிப்படி கஷ்டங்கள் அனுபவித்து,

உயிர் போனபின்னும், 

நான் படவேண்டிய யமதண்டனை 

எனும் துயரத்தை நீக்கி அருள்வாய்.

உலகப் பற்றை ஒழித்த தவசீலர்களின்

கருத்தில் போற்றப்படும் 

வயலூரில் வாழும் குருநாதனே,

உத்தமன், ருத்திரன், முக்கண்ணன், திகம்பரன்,

மழு ஏந்தியவன், திரிபுரத்தை எரித்தவன், ஆதிமூர்த்தி, 

மூலப் பொருளும் உண்மைப் பொருளும் ஆனவன்,

அறிவுக்கு எட்டாதவன்,

அற்புதன், உவமை இல்லாதவன்,

ஆகிய சிவபிரானிடத்துத் தோன்றியவனே,

திருசிராப்பள்ளியில் அமர்ந்தவனே.

 



pakal iraviniR 146 - 174

 

146 - 174 பகல் இரவினிற் - திருசிராப்பள்ளி

 

இவ்வுலகில் தடுமாறாது,

உனையே குரு என்று அறியும் 

ரகசியத்தை உபதேசிப்பாய்.

முத்தமிழ் தலைவா,

இவ்வுலகில் மேலான 

திரிசிராமலையில் செவ்வேளே,

சரவணப் பரம்பொருளே.


 

 

saththi pANI 145 - 173

 

145 - 173 சத்தி பாணீ நமோநம - திருசிராப்பள்ளி

 

ஞானசத்திவேலனே,

முத்தியைத் தரவல்ல பண்டிதா,

தத்துவங்களுக்கு முதலானவனே,

விந்து, நாதம், இரண்டிற்கும் சத்தான உண்மை,

என்றெல்லாம் பாடித் துதிக்கும் 

பத்தியை மேற்கொள்ள 

உன் பாதங்களைத் தருவாய்.

வேலாயுதனே, தேவர் சேனாபதியே,

குருமூர்த்தியே, வயலூரா, வள்ளிமணாளனே,

பார்வதி மைந்தா, ஞானிகளின் தலைவனே,

திருசிராமலையின் தாயுமானவர்க்கும் குருவே,

சிறந்த விரதங்களோடும்  

ஆசாரத்துடன் வாழும்

அனைவருக்கும் தலைவனே.

 


 

DhvaLa rUpa - kuvaLai pUsal 144 - 172

 

144 - 172 தவளரூப சரச்சுதி - குவளை பூசல் - திருசிராப்பள்ளி 


சரச்சுதி, லட்சுமி, ரதி, இந்திராணி,

கிருத்திகை பெண்கள், இரம்பையர்கள்

ஆகியோர் வணங்கும் துர்காதேவி, 

பயங்கரி, புவனேசுவரி, 

சத்தி, பார்வதி, எம் தாய்,

ஈன்று அருளிய முருகனே,

திருசிராமலையில் எழுந்தருளிய

சிவபெருமான் வணங்கிய பெருமாளே.


 

 

anthO manamE 143 - 171

 

143 - 171 அந்தோ மனமே - திருசிராப்பள்ளி

 

மனமே, 

இந்த உடலை நம்பி மோசம் போகாதே,

வேலாயுதனை நம்பினால்

மெய்நெறியும் மோக்ஷமும் கிட்டும்,

முருகன் நமக்கு அனுப்பின

மங்களம் தரும் 

திருநீறையும் பெற்றுக்கொள்ளலாம்.

சிவ மைந்தனே, குமரா,

எனப் பேரொலியிட்டு துதிக்க மறவாதே,

சூரனை வேலாயுதத்தைக் கொண்டு

சங்காரம் செய்த மயில் வாகனனே,

என் தந்தையும், சதாசிவ கோத்திரத்துக்கு

தலைவருமான சிவபெருமான் 

அருளிய புதல்வனே,

வள்ளியை மணந்து 

திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியவனே.


 

 

vEDa verpilE 142 - 169

 

142 - 169 வேத வெற்பிலே - திருக்கழுக்குன்றம்

 

வேதகிரியாம் திருக்கழுக்குன்றத்திலும்,

வள்ளிமலையிலும் இருப்பவனே,

வள்ளியைத் தேடி தினைப்புனத்துள் வந்தவனே,

நான் உன்னை வழிபட 

உரிய புத்தியைத் தருவாயே,

காளி நாணம் அடையும்படி 

தாண்டவ நிர்த்தம் செய்த

சிவபிரான் உன்னிடம் கேட்கவும், 

பிரமன் வெட்கம் அடையவும், 

ஓரெழுத்தாகிய ஓம்காரப் பிரணவத்தில்

ஆறெழுத்தும் அடங்கியதை

விளக்கி சிவனுக்கு உபதேசித்த பெருமாளே.

 


 

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...