Friday, 13 December 2024

kuruthi malajalam 059 - 070

 

059 - 070 குருதி மலசலம் - பழநி

 

இந்த மனித உடலினால் வந்த 

என் மனக்கஷ்டங்கள் நீங்க,

வினைகள் சிதற, என் மனது பக்குவமடைய,

உன் பாதத்தைத் தந்தருள்வாய்.

அசுரர்கள் அழிய, 

தேவர்கள் தங்கள் அமராவதியைப் பெற,

க்ரௌஞ்சமலை நெரிய, கடல் எரிய,

வேலாயுதத்தை வீசினவனே,

தேவர்களும் முனிவர்களும் மலர்கள் சொரிய,

மயிலை வாகனமாகக் கொண்டவனே,

சூரியன் சந்திரன் அக்கினி இவைகளை

விழியாகக் கொண்ட 

சிவபிரானின் இடபாகத்தில் இருப்பவள்,

இமவானின் புத்திரி, திருமாலின் தங்கையான

பார்வதி அருளிய குழந்தையே,

கணபதி மதயானையாக வர,

குறமகள் வள்ளிக்கு அடைக்கலம் கொடுத்தவனே,

பழநியில் இருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...